‘காட்ஃபாதர்’ முதல் ‘லால் சிங் சத்தா’ வரை: தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

By செய்திப்பிரிவு

இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் என்னென்ன புதுப் படங்கள் வெளியாகின்றன என்பது குறித்து ஒரு விரைவு முன்னோட்டத்தைப் பார்ப்போம். திரைப்படங்கள் மட்டுமல்லாமல், எந்தெந்த வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன என்பதையும் அறிவோம்.

தியேட்டர் ரிலீஸ்: மோகன்ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா, சல்மான் கான் நடித்துள்ள 'காட்ஃபாதர்' தெலுங்கு திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதேபோல நாகர்ஜூனாவின் 'ரட்சன் தி கோஸ்ட்' படம் அக்டோபர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷ்ரிஷ் சரவணன், சதீஷ், யோகிபாபு நடித்துள்ள 'பிஸ்தா', சுந்தரவடிவேலு இயக்கியிருக்கும் 'ரீ' ஆகிய இரண்டு தமிழ் படங்கள் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளன. இதைத் தவிர்த்து, அமிதா பச்சன், ராஷ்மிகா மந்தன்னா நடித்துள்ள 'குட் பை' இந்தி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

நேரடி ஓடிடி ரிலீஸ்: ஜெயசூர்யா, நமீதா ப்ரமோத் நடித்துள்ள மலையாள திரைப்படமான 'ஈஷோ' நேரடியாக சோனி லிவ் ஓடிடியில் அக்டோபர் 5-ம் தேதி வெளியாகியுள்ளது. ஆனந்த் திவாரி இயக்கத்தில் மாதுரி தீக்‌ஷித் நடித்துள்ள பாலிவுட் படமாக 'மஜா மா' திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் நேற்று வெளியாகியுள்ளது.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: ஆமீர்கான் நடிப்பில் உருவான 'லால் சிங் சத்தா' திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் தற்போது காணக் கிடைக்கிறது. அரவிந்த் சாமி, குஞ்சாகா போபன் நடித்துள்ள 'ஒட்டு' மலையாள திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் அக்டோபர் 6-ம் தேதி வெளியானது. நிகில் சித்தார்த், அனுபமா பரமேஸ்வர் நடித்துள்ள 'கார்த்திகேயா 2' மற்றும் அக்சய்குமார் நடித்துள்ள 'ரக்சா பந்தன்' திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.

இணையதள தொடர்கள்: மைக் ஃபிளனகன் இயக்கியிருக்கும் த்ரில்லர் தொடரான 'தி மிட் நைட் க்ளப்' ஆங்கில தொடர் நெட்ஃப்ளிக்ஸில் இன்று வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

2 hours ago

ஓடிடி களம்

4 days ago

ஓடிடி களம்

6 days ago

ஓடிடி களம்

8 days ago

ஓடிடி களம்

10 days ago

ஓடிடி களம்

15 days ago

ஓடிடி களம்

16 days ago

ஓடிடி களம்

18 days ago

ஓடிடி களம்

19 days ago

ஓடிடி களம்

22 days ago

ஓடிடி களம்

29 days ago

ஓடிடி களம்

1 month ago

ஓடிடி களம்

1 month ago

ஓடிடி களம்

1 month ago

ஓடிடி களம்

1 month ago

மேலும்