நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவனின் காதல் கதை அடங்கிய திருமண வீடியோ ஆவணப்பட பாணியில் விரிவாக வெளியாக உள்ளது. இதன் டீசரை நெட்ஃபிளிக்ஸ் இன்று வெளியிட்டுள்ளது.
நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் 'நானும் ரௌடி தான்' படத்திலிருந்து காதலிக்கத் தொடங்கினர். கடந்த ஜூன் மாதம் மாமல்லபுரத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதில் ஷாருக்கான், ரஜினிகாந்த், ஷாருக் கான், விஜய் சேதுபதி, சரத்குமார் மற்றும் இயக்குநர்கள் மணி ரத்னம், அட்லி உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
இந்தத் திருமணத்தின் வீடியோ வெளியீட்டு உரிமையை பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸ் கைப்பற்றியது. இதனை வெறும் வழக்கமான திருமண வீடியோவாக வெளியிடாமல் இருவரின் காதல் கதை அடங்கிய ஆவணப்பட பாணியில் வெளியிட திட்டமிடபட்டுள்ளது. திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் சிலரும் பேசும் வகையில் நீண்ட வீடியோவாக உருவாகியிருக்கும் இதன் டீசரை நெட்ஃப்ளிக்ஸ் இன்று வெளியிட்டுள்ளது. 'நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்' ('Nayanthara: Beyond the Fairy Tale') என்கிற இந்த ஆவணப் படத்தின் முழு வீடியோவும் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
» “மூன்று கதாநாயகிகளுக்குமே சமமான முக்கியத்துவம்” - ‘நித்தம் ஒரு வானம்’ இயக்குநர்
» ட்ரிகர் Review: அழுத்தமான ஒன்லைன் இருந்தும் தடுமாற்றத்துடன் தப்பிய குறி!
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
5 hours ago
ஓடிடி களம்
3 days ago
ஓடிடி களம்
4 days ago
ஓடிடி களம்
7 days ago
ஓடிடி களம்
11 days ago
ஓடிடி களம்
13 days ago
ஓடிடி களம்
14 days ago
ஓடிடி களம்
16 days ago
ஓடிடி களம்
18 days ago
ஓடிடி களம்
25 days ago
ஓடிடி களம்
27 days ago
ஓடிடி களம்
28 days ago
ஓடிடி களம்
1 month ago
ஓடிடி களம்
1 month ago
ஓடிடி களம்
1 month ago