ஓடிடியில் அண்மையில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ள மலையாள படங்கள் குறித்தும், அவை வெளியாகியுள்ள தளங்கள் குறித்தும் பார்ப்போம்.
தள்ளுமாலா (Thallumaala) : காலித் ரஹ்மான் இயக்கத்தில் டோவினோதாமஸ், கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள மலையாள திரைப்படம் 'தள்ளுமாலா'. ஆகஸ்ட் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஓடிடி வெளியீட்டுக்குப் பின் படம் ரசிகர்களிடையே கவனத்தையும் பாராட்டையும் பெற்று வருகிறது. இந்த வீக் எண்டுக்கு ஏற்ற படமாக ரசிகர்கள் இப்படத்தை சஜ்ஜெஸ்ட் செய்து வருகின்றனர்.
ன்னா, தான் கேஸ் கொடு (Nna, Thaan Case Kodu): ரத்திஷ் பாலகிருஷ்ணன் பொடுவால் இயக்கத்தில் குஞ்சாகா போபன், காயத்ரி நடித்துள்ள திரைப்படம் 'ன்னா, தான் கேஸ் கொடு' (Nna, Thaan Case Kodu). படம் ஆகஸ்ட் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும்போதே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ள நிலையில் பரவலான ரசிகர்களால் படம் கொண்டாடப்படுகிறது. சமகால சினிமாவில் மிகச் சிறந்த அரசியல் பகடி திரைப்படமாகவும் இது கவனிக்கப்படுகிறது.
சுந்தரி கார்டன்ஸ் (Sundari Gardens): சார்லி டேவிஸ் இயக்கத்தில் அபர்ணா பாலமுரளி, நீரஜ் மாதவ் நடிப்பில் உருவான படம் 'சுந்தரி கார்டன்ஸ்' (Sundari Gardens). சோனி லிவ் ஓடிடியில் காணக்கிடைக்கும் இப்படம் காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஃபீல் குட் மூவி என ரசிகர்களால் படம் வரவேற்கப்படுகிறது.
» விஜய் உடன் ராஷ்மிகாவின் செல்ஃபி - வைரலாகும் புகைப்படம்
» மாரி செல்வராஜ் - உதயநிதியின் ‘மாமன்னன்’ படப்பிடிப்பு நிறைவு
பாப்பன் (paappan): இயக்குநர் ஜோஷி இயக்கத்தில் சுரேஷ் கோபி, நீட்டா பிள்ளை நடிப்பில் உருவான படம் 'பாப்பன்'. ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இப்படம் இந்த வார வீக் எண்ட்டுக்கு ஏற்ற க்ரைம் த்ரில்லர் என ரசிகர்களால் பரவலான கருத்துகள் பகிரப்படுகின்றன.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
2 hours ago
ஓடிடி களம்
2 hours ago
ஓடிடி களம்
1 day ago
ஓடிடி களம்
5 days ago
ஓடிடி களம்
7 days ago
ஓடிடி களம்
9 days ago
ஓடிடி களம்
11 days ago
ஓடிடி களம்
16 days ago
ஓடிடி களம்
17 days ago
ஓடிடி களம்
19 days ago
ஓடிடி களம்
20 days ago
ஓடிடி களம்
23 days ago
ஓடிடி களம்
30 days ago
ஓடிடி களம்
1 month ago
ஓடிடி களம்
1 month ago