இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் என்னென்ன புதுப் படங்கள் வெளியாகின்றன என்பது குறித்து ஒரு விரைவு முன்னோட்டத்தைப் பார்ப்போம். திரைப்படங்கள் மட்டுமல்லாமல், எந்தெந்த வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன என்பதையும் அறிவோம்.
தியேட்டர் ரிலீஸ்: அறிமுக இயக்குநர் அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள 'தேஜாவு' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
சாம் ஜோன்ஸ், கயல் ஆனந்தி நடித்துள்ள 'நதி' திரைப்படமும், தேஜ் சரண்ராஜ் நடித்துள்ள 'சிவி 2' படத்தையும் நாளை திரையரங்குகளில் காணலாம்.
ஹன்சிகா மோத்வானி, சிம்பு நடித்துள்ள 'மஹா' நாளை ரிலீசாகிறது. 4 கதாநாயகிகள் நடிக்கும் 'வார்டு 126' படத்தை நாளை முதல் திரையரங்குகளில் காணலாம்.
» ஆக்ஷனில் கலக்கும் விஜய் தேவரகொண்டா - வெளியானது 'லிகர்' ட்ரெய்லர்
» வேட்டி - சட்டை, வணக்கம்... மும்பையில் 'தி கிரே மேன்' சிறப்புத் திரையிடல் நிகழ்வில் ஈர்த்த தனுஷ்
தவிர, மஹேஷ் நாராயணன் எழுத்தில் ஃபஹத் பாசில், ரஜிஷா விஜயன் நடித்துள்ள 'மலையன் குஞ்சு' மற்றும் அப்ரிட் ஷைன் இயக்கத்தில் நிவின் பாலி, ஆசிஃப் அலி, லால் நடித்துள்ள 'மாஹாவீர்யார்' ஆகிய இரண்டு மலையாள படங்களும் நாளை வெளியாகிறது.
மேலும், நாகா சைதன்யா, ராஷி கண்ணா நடிப்பில் உருவாகியுள்ள 'தேங்க்யூ' தெலுங்கு படத்தையும், ரன்பீர்கபூர், சஞ்சய் தத், வாணி கபூர் நடித்துள்ள 'ஷம்ஷேரா' ஹிந்தி படத்தையும் நாளை திரையரங்குகளில் காணலாம்.
நேரடி ஓடிடி ரிலீஸ்: ஜோ ருஸ்ஸோ, அந்தோனி ருஸ்ஸோ இயக்கத்தில், ரியான் காஸ்லிங், அனா தி ஆர்மஸ், தனுஷ் நடித்துள்ள 'தி க்ரே மேன்' திரைப்படம் நாளை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
கிறிஸ்டோஃபர் கார்ல்சன் ரஸ் இயக்கத்தில் குழந்தைகளுக்கான 'டூ ஓல்ட் ஃபார் பேரி டேல்ஸ்' (Too Old For Fairy Tales) படம் நெட்ஃப்ளிக்ஸில் தற்போது காணக்கிடைக்கிறது.
திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: மாதவன் இயக்கி நடித்துள்ள 'ராக்கெட்ரி தி நம்பி விளைவு' படம் ஜூலை 26-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளது. ஆதிதி ரவி, சுராஜ் வெஞ்சரமூடு நடித்துள்ள பத்தம் வளவு (Pathaam Valavu) படம் நாளை மனோராமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
வெப் சீரிஸ்: அருண் கௌஷிக் இயக்கத்தில், ஆதித்யா பாஸ்கர், நம்ரிதா, குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவாகியுள்ள 'மீம் பாய்ஸ்' இணைய தொடர் சோனி லிவ் ஓடிடியில் நாளை வெளியாகிறது.
தவிர, ஆகன்ஷா சிங், நவீன் சந்திரா 'பரம்பரா' தெலுங்கு இணைய தொடரின் 2-வது சீசன் இன்று ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
1 day ago
ஓடிடி களம்
2 days ago
ஓடிடி களம்
5 days ago
ஓடிடி களம்
10 days ago
ஓடிடி களம்
11 days ago
ஓடிடி களம்
12 days ago
ஓடிடி களம்
14 days ago
ஓடிடி களம்
17 days ago
ஓடிடி களம்
23 days ago
ஓடிடி களம்
25 days ago
ஓடிடி களம்
26 days ago
ஓடிடி களம்
29 days ago
ஓடிடி களம்
30 days ago
ஓடிடி களம்
1 month ago
ஓடிடி களம்
1 month ago