கமலின் 'விக்ரம்' திரைப்படம் ஜூலை 8-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், பஹத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'விக்ரம்'. அனிருத் இசையில் கடந்த ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழகத்தில் இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது. அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்ற இந்தப் படம், தமிழ்நாட்டில் மட்டும் ரூ.160 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் 'பாகுபலி 2' படத்தின் வசூல் சாதனையை 'விக்ரம்' முறியடித்தது.
உலகம் முழுவதும் ரூ.400 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
» சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ‘டீசல்’ - ஆக்ஷனில் இறங்கும் ஹரீஷ் கல்யாண்
» தமிழில் தொடர்ந்து ஏன் நடிக்கவில்லை? - நடிகர் பிருத்விராஜ் விளக்கம்
இந்நிலையில், படத்தின் ஓடிடி உரிமை ரூ.98 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் ஓடிடி உரிமையை டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், ஜூலை 8-ம் தேதி முதல் ஓடிடியில் 'விக்ரம்' படம் வெளியாகும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
5 hours ago
ஓடிடி களம்
5 hours ago
ஓடிடி களம்
1 day ago
ஓடிடி களம்
5 days ago
ஓடிடி களம்
7 days ago
ஓடிடி களம்
9 days ago
ஓடிடி களம்
12 days ago
ஓடிடி களம்
16 days ago
ஓடிடி களம்
17 days ago
ஓடிடி களம்
19 days ago
ஓடிடி களம்
21 days ago
ஓடிடி களம்
23 days ago
ஓடிடி களம்
30 days ago
ஓடிடி களம்
1 month ago
ஓடிடி களம்
1 month ago