'நெஞ்சுக்கு நீதி' முதல் 'ஆர்ஆர்ஆர்' வரை: தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

By செய்திப்பிரிவு

இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் என்னென்ன புதுப்படங்கள் வெளியாகின்றன என்பது குறித்து ஒரு விரைவு முன்னோட்டத்தைப் பார்ப்போம். திரைப்படங்கள் மட்டுமல்லாமல், எந்தெந்த வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன என்பதையும் அறிவோம்.

தியேட்டர் ரிலீஸ்: உதயநிதி நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் நாளை (மே 20) திரையரங்குகளில் வெளியாகிறது. இது இந்தியில் வெளியான 'ஆர்டிக்கள் 15' படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிமுக இயக்குநர் சிவானி செந்தில் இயக்கத்தில் ராம்ஸ், ஜான் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'டேக் டைவர்ஷன்' திரைப்படம் நாளை (மே 20) முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.

ரஜிஷா விஜயன் நடிப்பில் ராஹூல் ரிஜி நாயர் எழுதி இயக்கியிருக்கும் 'கீடம்' மலையாள படத்தை நாளை முதல் திரையரங்குகளில் காணலாம்.

சந்தோஷ் சிவன் இயக்கத்தில் சௌபின் சாகிர், மஞ்சு வாரியர், நெடுமுடி வேணு நடித்த ஜாக் அண்ட் ஜில் மலையாள படம் நாளை வெளியாகிறது.

கங்கனா ரணாவத்தின் 'தாகத்' திரைப்படமும், கார்த்திக் ஆர்யன், கீரா அத்வானி, தபு ஆகியோர் நடிப்பில் உருவான, 'பூல் புலையா 2' (Bhool Bhulaiyaa 2) படமும் மே 20-ம் தேதியான நாளை வெளியிடப்பட உள்ளது.

பியர் பெரிஃபெல் இயக்கத்தில் சாம் ராக்வெல் நடித்துள்ள ஹாலிவுட் படமான 'தி பேட் கய்ஸ்' படம் நாளை வெளியாகிறது.

ஓடிடி ரிலீஸ் : டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இயக்குநர் ஜீது ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள '12த் மேன்' படம் நாளை வெளியிடப்பட உள்ளது.

இது தவிர, திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டு, ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் படங்களின் பட்டியலையும் பார்க்கலாம்.

ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது. அதேபோல, சிரஞ்சீவி, ராம்சரண் நடித்த 'ஆச்சர்யா' படமும் நாளை அமேசான் பிரைம் தளத்தில் வெளியிடப்பட உள்ளது.

தவிர, நெட்பிளிக்ஸ் தளத்தில் ஷாயித் கபூர் நடித்த 'ஜெர்ஸி' படமும், ஆதித்யா சர்போத்தர் இயக்கத்தில் வெளியான மராத்தி படமான 'ஜோம்பிவ்லி' திரைப்படம் ஜீ5 தளத்தில் நாளை வெளியாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

6 hours ago

ஓடிடி களம்

6 hours ago

ஓடிடி களம்

1 day ago

ஓடிடி களம்

5 days ago

ஓடிடி களம்

7 days ago

ஓடிடி களம்

9 days ago

ஓடிடி களம்

12 days ago

ஓடிடி களம்

16 days ago

ஓடிடி களம்

17 days ago

ஓடிடி களம்

19 days ago

ஓடிடி களம்

21 days ago

ஓடிடி களம்

23 days ago

ஓடிடி களம்

30 days ago

ஓடிடி களம்

1 month ago

ஓடிடி களம்

1 month ago

மேலும்