சென்னை: விக்ரம் பிரபு நடித்த “டாணாக்காரன்” திரைப்படம் ஏப்ரல் 8-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில், வெளியாகிறது. இதுதொடர்பாக இன்று சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், "ரசிகர்களின் பாராட்டை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று படத்தின் இயக்குநர் தமிழ் கூறியுள்ளார்.
இயக்குனர் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள “டாணாக்காரன்” திரைப்படம் ஏப்ரல் 8, 2022 அன்று பிரத்யேகமாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிகிறது.இப்படத்தின் ட்ரெய்லர் இன்று (மார்ச் 31) டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் அனைத்து சமூக வலைத்தள பக்கங்களிலும் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் தமிழின் மேக்கிங், நடிகர்களின் பங்களிப்பு, புதிய கதைக்களம் என படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த ரசிகர்கள் பாராட்டுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில் விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர் மற்றும் லால் ஆகியோர் முதன்மை வேடங்களிலும், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜிப்ரான் இசையமைத்துள்ளார், ஃபிலோமின் ராஜ் எடிட்டராக பணியாற்றியுள்ளார். காவல் துறை சார்ந்த எண்ணற்ற திரைப்படங்களை தமிழ் சினிமா பார்த்திருந்தாலும், டாணாக்காரன் பார்வையாளர்களுக்கு அறிமுகமில்லாத ஒரு புதிய பார்வையை, ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கும்.
» தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் சதமடித்த டீசல் விலை: ஒரு லிட்டர் ரூ.100.01-க்கு விற்பனை
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது இயக்குநர் தமிழ் கூறியது: "என்னுடைய படத்துக்கு இத்தனை ஆசீர்வாதங்கள் கிடைத்திருப்பது என்னைப் போன்ற ஒரு இயக்குநருக்கு மிகவும் பெருமை. டாணாக்காரன் திரைப்படத்தின் மீது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆர்வம் காட்டியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கதையின் மீது நம்பிக்கை வைத்த எனது தயாரிப்பாளர்களான S.R.பிரகாஷ் பாபு, S.R.பிரபு, P.கோபிநாத் மற்றும் R.தங்க பிரபாகரன் ஆகியோருக்கு நன்றி.
இந்த ஸ்கிரிப்டை வைத்து நான் பல தயாரிப்பு நிறுவனங்களை அணுகியபோது, முதலில் அனைவரும் தயங்கினர், திரைக்கதையில் பல மாற்றங்களை செய்யப் பரிந்துரைத்தனர். ஆனால், பொட்டன்ஷியல் ஸ்டுடியோவின் தயாரிப்பாளர்கள் அத்தகைய மாற்றங்கள் எதையுமே சொல்லவில்லை, இது எனக்கு மிகுந்த ஆச்சரியம் அளித்தது.
மேலும் எனது இயக்கத்தில் எந்த குறையும் வராமல் இருக்க, அவர்கள் ஒரு பெரிய பட்ஜெட்டை படத்திற்காக செலவழித்தனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தின் மீது நம்பிக்கை வைத்த விக்ரம் பிரபுவுக்கு நன்றி. அவர் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார், மேலும் அவரது நடிப்பை பார்வையாளர்கள் விரும்புவார்கள், பெரிதும் பாராட்டுவார்கள் என்று நான் நம்புகிறேன்.
அஞ்சலி நாயர், லால் சார், எம்.எஸ்.பாஸ்கர் சார் மற்றும் இந்தப் படத்தில் நடித்த ஒவ்வொரு கலைஞர்களும் படத்தின் தரத்தை உயர்த்தி இருக்கிறார்கள். ஏப்ரல் 8, 2022 முதல், ரசிகர்களின் பாராட்டை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று அவர் கூறினார்.
படத்தின் நாயகன் நடிகர் விக்ரம் பிரபு கூறியது: "டாணாக்காரன்" என்ற தலைப்பே மிகவும் அழுத்தமாக இருந்தது, இந்த ஸ்கிரிப்டை கேட்ட பிறகு, இதில் நடித்தே ஆக வேண்டும் என முடிவு செய்தேன், ஒரு நடிகராக எனது திறமையை வெளிப்படுத்தும் படைப்பாக இருக்கும். தமிழ் திரையுலகில் படைப்பாற்றல் மற்றும் திறமையாளர்களை கண்டெடுத்து, வளர்க்கும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் போன்ற தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிவது, ஒரு அற்புதமான அனுபவம். தயாரிப்பாளர்களின் ஆதரவு இல்லையென்றால், டாணாக்காரன் இவ்வளவு திருப்திகரமான வெளியீட்டைக் கண்டிருக்க முடியாது.
இயக்குநர் தமிழ், இந்தப் படத்தை தன் உயிராக வடிவமைத்து, மிக அற்புதமான படைப்பாகச் செதுக்கியுள்ளார். டாணாக்காரன் படத்திற்கு மிகப்பெரிய அங்கீகாரமாக அமைந்திருக்கும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் வெளியீட்டுக்கு நன்றி. டாணாக்காரன் மூலம் பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவம் கிடைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.
டாணாக்காரன் குறித்து படக்குழு வெளியிட்ட தகவல்கள்: இப்படத்தின் படப்பிடிப்பிற்காக சரியான இடத்தை தேடி இயக்குநர் தமிழ், தமிழ்நாடு மற்றும் கேரளா முழுதும் 40 நகரங்களுக்கு மேல் பயணித்துள்ளார். ஒட்டுமொத்தக் குழுவும் தீவிரமான முன் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டது. இறுதியாக, இயக்குனர் வேலூரில் உள்ள ஒரு பள்ளியை தனது கதையின் பின்னணிக்கு ஏற்றதாகத் தேர்ந்தெடுத்தார்.
படக்குழுவினர் இப்படத்திற்காக நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொண்டு கடினமாக உழைத்துள்ளனர். இப்படத்தின் அணிவகுப்பு காட்சிகளுக்கு தீவிர பயிற்சி தேவைப்பட்டது. இயக்குனர் சாதாரண நடிகர்களுக்கு பதிலாக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள், காவலர்கள் மற்றும் போலீஸ் பயிற்றுனர்களைத் தேர்வு செய்து அக்காட்சிகளில் நடிக்க வைத்துள்ளார். கடின உழைப்பில், இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் புதுமுக கலைஞர்கள் பலரை வைத்து வெறும் 50 நாட்களில் படத்தை முடித்துள்ளார் இயக்குநர் தமிழ்.
நடிகர் விக்ரம் பிரபு, இந்த கதை மற்றும் கதாபாத்திரங்களைக் கேட்டு மிகவும் ஈர்க்கப்பட்டு, படத்திற்காக கடின உழைப்பை தந்துள்ளார். விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்றிருக்கும் திரைப்பட இயக்குநரும் நடிகருமான லால் இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாயகனைப் போலவே வலுவான லாலின் கதாபாத்திரத்தை வைத்துதான் டாணாக்காரன் திரைக்கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் தமிழ்.
பன்முக நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், இப்படத்தில் இதயத்தைத் தொடும் பாத்திரத்தில் பாராட்டைப் பெறுவார். நாயகியாக நடிக்கும் அஞ்சலி நாயர் வெறும் காதல் நாயகியாக தோன்றவில்லை, படம் முழுவதும் அவருக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரத்தில் நடித்துள்ளார்.
மாதேஷ் மாணிக்கம் இந்தப் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார். ஒரு அற்புதமான காட்சி அனுபவத்தை இப்படத்தில் வழங்கியுள்ளார், வெளியீட்டிற்குப் பிறகு, குறிப்பாக அணிவகுப்பு காட்சிகள் அவரது ஒளிப்பதிவு பெரும் பாராட்டுக்களை குவிக்கும்.
எடிட்டர் ஃபிலோமின் ராஜ் முழுப் படத்திலும் மிக அற்புதமான பணியினை செய்துள்ளார். படத்தில் ஒரு குறிப்பிட்ட அணிவகுப்புக் காட்சிக்காக எட்டு நாட்கள் இடைவிடாமல் எடிட்டிங் செய்ததன் மூலம் இந்தத் திரைப்படத்தின் மீதான அவரது தீராத அர்ப்பணிப்பு வெளிப்பட்டுள்ளது.
டாணாக்காரனை கச்சிதமாக வடிவமைப்பதில் கலை இயக்குனர் ராகவன் முக்கிய பங்கு வகித்துள்ளார். படப்பிடிப்புக்கான இடங்களைத் தேடித் தேர்வு செய்யும் கட்டத்தில் இருந்து இயக்குநருடன் , ராகவன் பயணித்து, ஒரு அற்புதமான காட்சி விருந்தைத் தயாரித்து வழங்கியுள்ளார். இதனால் படத்தின் காட்சிகளில் வரும் சிறிய பொருள் கூட திரைப்பத்துக்கான அமைப்பு அல்லாமல் இயற்கையாகத் தோன்றும்.இசையமைப்பாளர் ஜிப்ரானின் பங்களிப்பு இந்தப் படத்திற்கு பெரும் தூணாக அமைந்துள்ளது. படத்தின் முதல் பிரதி காட்சிகளைப் பார்த்துவிட்டு, இந்தப் படத்தின் பின்னணி இசைக்காக 6 மாதங்கள் ஒதுக்கி இசையமைத்துள்ளார்.
தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் பொழுதுபோக்கு பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் மற்றும் பிரீமியம் தொடர்களை உலகளவில் ரசிகர்களுக்காக வழங்கி வரும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில், டாணாக்காரன் ஏப்ரல் 8, முதல் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
1 day ago
ஓடிடி களம்
3 days ago
ஓடிடி களம்
5 days ago
ஓடிடி களம்
6 days ago
ஓடிடி களம்
6 days ago
ஓடிடி களம்
7 days ago
ஓடிடி களம்
8 days ago
ஓடிடி களம்
9 days ago
ஓடிடி களம்
12 days ago
ஓடிடி களம்
13 days ago
ஓடிடி களம்
14 days ago
ஓடிடி களம்
14 days ago
ஓடிடி களம்
19 days ago
ஓடிடி களம்
22 days ago
ஓடிடி களம்
25 days ago