உங்கள் நெட்ஃபிளக்ஸ் ஃபாஸ்வேர்டை வேறொருவருடன் பகிர்வது இன்னும் சில நாட்களில் கடந்த கால செய்தியாக மாறக் கூடும். இதை முற்றிலும் கட்டுப்படுத்த தீவிரம் காட்டி வருகிறது நெட்ஃப்ளிக்ஸ்.
ஆம், தங்களது நெட்ஃபிளக்ஸ் அக்கவுண்டை பிறருக்கு பகிரும் பயனர்கள், அப்படிப் பகிரப்படும் கூடுதல் உறுப்பினர்களுக்கான கூடுதல் கட்டணத்தை செலுத்தச் சொல்லப்போகிறது நெட்ஃப்ளிக்ஸ். இதற்னான பரிசோதனை வழிகளை விரைவில் தொடங்க இருப்பதாக நெட்ஃபிளக்ஸ் அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை நெட்ஃபிளக்ஸ் நிறுவனம் தனது இணையப் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதில், “ஒரே வீட்டில் உள்ளவர்கள் நெட்ஃபிளக்ஸ் கணக்கைப் பகிர்வதை நாங்கள் எப்போதும் எளிதாக்கியுள்ளோம். இது, எங்களது வாடிக்கையாளர்களிடம் மிகவும் பிரபலமாக இருந்தாலும், நெட்ஃபிளிக்ஸ் அக்கவுண்ட் எப்போது, எப்படி பகிரப்படுகிறது என்பதில் சில குழப்பங்களையும் உருவாக்கியுள்ளன.
குடும்பத்திற்கு வெளியே நெட்ஃபிளக்ஸ் கணக்குகளை தவறாகப் பகிர்வது என்பது புதிய தொடர்கள் மற்றும் படங்கள் நெட்ஃபிளக்ஸில் முதலீடு செய்வதை பாதிக்கின்றது. உங்களது குடும்பத்திற்கு வெளியே கூடுதலாக ஒரு நபருடன் நெட்ஃபிளக்ஸ் அக்கவுண்ட்டின் ஃபாஸ்வேர்டு பகிரப்படுவதற்கு இனி கட்டணம் நிர்ணயிக்க சோதனை முயற்சிகள் கொண்டுவரப்பட உள்ளன. இந்தப் பரிசோதனை முயற்சிளை முதலில் சிலி, பெரு போன்ற நாடுகளில் செயல்முறைப்படுத்த உள்ளோம்.
» மக்களுக்கான அரசு சேவைகளை விரைவுபடுத்தக் கோரி ஆட்சியர் அலுவலகங்களில் மனு: மநீம அறிவிப்பு
மக்களுக்குப் பல பொழுதுபோக்குத் தேர்வுகள் உள்ளன என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். எனவே, எந்த புதிய அம்சங்களும் உறுப்பினர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் பயனுள்ளதாகவும் இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம்” என்று நெட்ஃப்ளிக்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
3 days ago
ஓடிடி களம்
6 days ago
ஓடிடி களம்
7 days ago
ஓடிடி களம்
10 days ago
ஓடிடி களம்
15 days ago
ஓடிடி களம்
16 days ago
ஓடிடி களம்
17 days ago
ஓடிடி களம்
19 days ago
ஓடிடி களம்
22 days ago
ஓடிடி களம்
28 days ago
ஓடிடி களம்
30 days ago
ஓடிடி களம்
1 month ago
ஓடிடி களம்
1 month ago
ஓடிடி களம்
1 month ago
ஓடிடி களம்
1 month ago