பாலாஜி மோகனின் புதிய வெப் தொடர் 

By செய்திப்பிரிவு

பாலாஜி மோகனின் ஓபன் விண்டோ நிறுவனம் தனது அடுத்த வெப் தொடர் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது

2017ஆம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான வெப் தொடர் ‘ஆஸ் ஐ ஆம் சஃபரிங் ஃப்ரம் காதல்’. இத்தொடரில் பாலாஜி மோகன், தன்யா பாலகிருஷ்ணா, சனந்த், சுந்தர் ராமு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியான இத்தொடர் அப்போது நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் பாலாஜி மோகனின் ஓபன் விண்டோ நிறுவனம் தனது அடுத்த வெப் தொடர் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பாலாஜி மோகனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய விக்னேஷ் விஜயகுமார் எழுதி இயக்கும் இத்தொடரில் பிரசன்னா, எஸ்.பி.பி சரண், தன்யா பாலகிருஷ்ணா, கனிகா, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தற்போது சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இத்தொடரின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. வரும் பிப்ரவரி மாதம் இத்தொடரின் படப்பிடிப்புப் பணிகளை முடித்து விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இன்னும் தலைப்பிடப்படாத இத்தொடருக்கு ஜி.ஆர்.என் சிவா ஒளிப்பதிவு செய்ய, பரத் சங்கர் இசையமைக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

2 days ago

ஓடிடி களம்

3 days ago

ஓடிடி களம்

4 days ago

ஓடிடி களம்

6 days ago

ஓடிடி களம்

9 days ago

ஓடிடி களம்

15 days ago

ஓடிடி களம்

17 days ago

ஓடிடி களம்

18 days ago

ஓடிடி களம்

21 days ago

ஓடிடி களம்

22 days ago

ஓடிடி களம்

24 days ago

ஓடிடி களம்

25 days ago

ஓடிடி களம்

25 days ago

ஓடிடி களம்

25 days ago

ஓடிடி களம்

25 days ago

மேலும்