ஹைதராபாத்: அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா 2’ படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி குறித்து வெளியான தகவலுக்கு படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘புஷ்பா’. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் படத்துக்கு இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. படம் 14 நாட்களில் ரூ.1508 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ‘புஷ்பா 2’ படம் ஜனவரி 9ஆம் தேதி முதல் ஓடிடியில் வெளியாக உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது திரையரங்கில் பார்க்காமல் ஓடிடியில் மட்டுமே படங்கள் பார்க்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. இதனையடுத்து இந்த தகவலுக்கு படக்குழு விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “புஷ்பா 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த வதந்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. இந்த விடுமுறை சீசனில் ‘புஷ்பா 2’ படத்தை திரையரங்குகளில் கண்டு ரசியுங்கள். 56 நாட்களுக்கு படம் எந்த ஓடிடியிலும் வெளியாகாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
1 day ago
ஓடிடி களம்
3 days ago
ஓடிடி களம்
6 days ago
ஓடிடி களம்
12 days ago
ஓடிடி களம்
14 days ago
ஓடிடி களம்
15 days ago
ஓடிடி களம்
18 days ago
ஓடிடி களம்
19 days ago
ஓடிடி களம்
21 days ago
ஓடிடி களம்
22 days ago
ஓடிடி களம்
22 days ago
ஓடிடி களம்
22 days ago
ஓடிடி களம்
22 days ago
ஓடிடி களம்
23 days ago
ஓடிடி களம்
23 days ago