சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு ஒரு வாரம் தாமதமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘அமரன்’ படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் ஓடிடி வெளியீட்டு உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. திரையரங்க வெளியீட்டில் இருந்து 28 நாட்களுக்கு பின்பு ஓடிடியில் வெளியாகும் என ஒப்பந்தம் செய்திருந்தார்கள். ஆனால், திரையரங்குகளில் படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனால் ஒரு வாரம் ஓடிடி வெளியீட்டை தள்ளி வைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதே போன்றதொரு சூழல் தான் ‘மகாராஜா’ மற்றும் ‘லப்பர் பந்து’ ஆகிய படங்களுக்கு நடந்தது என்பது நினைவுக் கூரத்தக்கது. மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட படம் தான் ‘அமரன்’. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். சோனி நிறுவனம், கமல்ஹாசன் மற்றும் மகேந்திரன் ஆகியோர் தயாரித்து வெளியிட்ட இப்படம் உலகளவில் 250 கோடி வசூலை கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
1 day ago
ஓடிடி களம்
2 days ago
ஓடிடி களம்
4 days ago
ஓடிடி களம்
6 days ago
ஓடிடி களம்
8 days ago
ஓடிடி களம்
15 days ago
ஓடிடி களம்
17 days ago
ஓடிடி களம்
18 days ago
ஓடிடி களம்
21 days ago
ஓடிடி களம்
21 days ago
ஓடிடி களம்
24 days ago
ஓடிடி களம்
25 days ago
ஓடிடி களம்
25 days ago
ஓடிடி களம்
25 days ago
ஓடிடி களம்
25 days ago