சாய் தன்ஷிகாவின் ‘ஐந்தாம் வேதம்’ வெப்சீரிஸ் டீசர் எப்படி? - கவனம் ஈர்க்கும் விறுவிறுப்பான த்ரில்லர் களம்!

By செய்திப்பிரிவு

சென்னை: சாய் தன்ஷிகா நடித்துள்ள ‘ஐந்தாம் வேதம்’ வெப்சீரிஸின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 90களில் வெளியாகி புகழ்பெற்ற ‘மர்ம தேசம்’ தொடரை இயக்கிய நாகா இந்த தொடரை இயக்கியுள்ளார்.

டீசர் எப்படி?: இந்த தொடர் புராணங்களை அடிப்படையாக கொண்ட த்ரில்லராக உருவாகியிருப்பதை டீசரின் காட்சிகள் உணர்த்துகின்றன. விறுவிறுப்பாக காட்சிகள் நகர்வதும், அதையொட்டிய மர்மங்களும் தொடர் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. சிஜி மட்டும் கொஞ்சம் பிசிறடிக்கிறது. சந்தோஷ் பிரதாப், சாய் தன்ஷிகா கவனம் ஈர்க்கின்றனர். இந்தத் தொடர் வரும் அக்டோபர் 25-ம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்தாம் வேதம்: ‘மர்ம தேசம்’ புகழ் இயக்குநர் நாகா இயக்கத்தில் சாய் தன்ஷிகா நடித்துள்ள தொடர் ‘ஐந்தாம் வேதம்’. அபிராமி மீடியா ஒர்க்ஸ் தயாரித்துள்ள இந்தப் புராணத் தொடரில், சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், ஒய்.ஜி. மகேந்திரா, கிரிஷா குருப், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இந்த வெப்சீரிஸ் வெளியாகிறது.

கதைக்களம் என்ன?: அனு தனது தாயின் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்காக, வாரணாசிக்கு செல்லும் ஒரு பயணத்தில் இந்தக்கதை தொடங்குகிறது. வழியில், ஒரு மர்மமான நபரை அவர் சந்திக்கிறார். அவர் ஒரு பழங்கால நினைவுச்சின்னத்தை அவளிடம் ஒப்படைக்கிறார். அதைத் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சாமியாரிடம் ஒப்படைக்கும்படி கூறுகிறார். ஐந்தாம் வேதத்தின் ரகசியம் அடங்கிய அந்தப் பொருள் பல பல ரகசியங்களை உடைக்கிறது. தயங்கியபடி அந்தப் பணியை ஏற்றுக்கொள்ளும் அனு, பல சிக்கல்களுக்கு உள்ளாகிறாள். பல ஆபத்துகளும் அவரை சூழ்கிறது. இந்தத் தடைகளைத் தாண்டி அவர் தன் பயணத்தில் வெற்றி அடைந்தாளா? என்பது தான் ஐந்தாம் வேதத்தின் கதைக்களம்.
டீசர் எப்படி?:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

4 days ago

ஓடிடி களம்

5 days ago

ஓடிடி களம்

7 days ago

ஓடிடி களம்

8 days ago

ஓடிடி களம்

11 days ago

ஓடிடி களம்

18 days ago

ஓடிடி களம்

20 days ago

ஓடிடி களம்

21 days ago

ஓடிடி களம்

24 days ago

ஓடிடி களம்

24 days ago

ஓடிடி களம்

27 days ago

ஓடிடி களம்

27 days ago

ஓடிடி களம்

28 days ago

ஓடிடி களம்

28 days ago

ஓடிடி களம்

28 days ago

மேலும்