மதுரை: ஓடிடி தளத்தில் வெளியாகும் சினிமா மற்றும் இணைய தொடர்களை தணிக்கைக்கு உட்படுத்தக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த ஆதிசிவம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “இந்தியாவில் திரைப்பட தணிக்கை வாரியம் 1952-ல் உருவாக்கப்பட்டது. சினிமாவில் ஒழுக்கம், அறம் மற்றும் கலாச்சாரத்தை மீறும் வகையிலான காட்சிகள், வசனங்கள், பாடல்கள், நடிகர்களின் அசைவுகள் இருப்பின் அவற்றை திரைப்பட தணிக்கை சட்டத்தின் கீழ் இந்திய திரைப்பட தணிக்கை வாரியம் தணிக்கை செய்து வெளியிடும்.
தற்போது, 85 கோடி பேர் தினமும் இணையத்தை பயன்படுத்துகின்றனர். இவர்கள் ஓடிடி தளத்தில் வெளியாகும் சினிமா, இணைய தொடர்கள் ஆகியவற்றை பார்வையிடுகின்றனர். ஓடிடி தளத்தில் வெளியாகும் சினிமா மற்றும் தொடர்களில் வன்முறை, போதைப்பொருள் பயன்பாடு, ஆபாச பேச்சுக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான காட்சிகள், பிரிவினைவாத காட்சிகள், தேசவிரோத கருத்துக்கள் எந்த தணிக்கையும் செய்யப்படாமல் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
கடந்த 2018-ல் 2.4 பில்லியன் பேர் ஓடிடி தளத்தை பயன்படுத்தியுள்ளனர். இந்த எண்ணிக்கை 2027-ல் 4.2 பில்லியனாக உயரும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தணிக்கை செய்யப்படாத திரைப்படங்கள், இணையத் தொடர்களை பார்க்கும் இளம் தலைமுறையினர் உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பல பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.எனவே, ஓடிடி தளத்தில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் இணைய தொடர்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளை தணிக்கை செய்து வெளியிட தனி அமைப்பு அல்லது தற்போதுள்ள சினிமா தணிக்கை வாரியம் வழியாகவோ நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,” எனக் கூறப்பட்டிருந்தது.
» ஜீவாவின் ‘பிளாக்’ ட்ரெய்லர் எப்படி? - மர்மமும் விறுவிறுப்பும்!
» “AI தாக்கத்தால் எதிர்காலத்தில் இசையமைப்பாளர்களுக்கு வேலை இருக்காது” - யுவன் சங்கர் ராஜா
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வில் இன்று (செப்.25) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கே.நீலமேகம் வாதிட்டார். பின்னர் மனு தொடர்பாக மத்திய உள்துறை செயலர், மத்திய தொலை தொடர்புத் துறை செயலர், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
2 days ago
ஓடிடி களம்
5 days ago
ஓடிடி களம்
6 days ago
ஓடிடி களம்
9 days ago
ஓடிடி களம்
13 days ago
ஓடிடி களம்
15 days ago
ஓடிடி களம்
16 days ago
ஓடிடி களம்
18 days ago
ஓடிடி களம்
20 days ago
ஓடிடி களம்
27 days ago
ஓடிடி களம்
29 days ago
ஓடிடி களம்
30 days ago
ஓடிடி களம்
1 month ago
ஓடிடி களம்
1 month ago
ஓடிடி களம்
1 month ago