நானியின் ‘சரிபோதா சனிவாரம்’ செப்.26-ல் ஓடிடியில் ரிலீஸ்!

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: நானி நடித்துள்ள ‘சரிபோதா சனிவாரம்’ திரைப்படம் செப்டம்பர் 26-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நானி நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘அந்தே சுந்தரானிகி’ படத்தின் இயக்குநர் விவேக் ஆத்ரேயா. இவர் இயக்கியுள்ள படம் ‘சரிபோதா சனிவாரம்’ (Saripodhaa Sanivaaram). இந்தப் படத்துக்கு தமிழில் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இதனை ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை தயாரித்த டிவிவி என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் நானி, எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன், முரளி ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.

வெகுஜன ரசிகர்களுக்கான ‘மாஸ்’ திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் உலக அளவில் ரூ.100 கோடியை வசூலித்தது. இந்நிலையில், இப்படம் வரும் செப்டம்பர் 26-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தை தெலுங்கு தவிர்த்து, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE