‘ராயன்’ முதல் ‘சட்னி சாம்பார்’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

By செய்திப்பிரிவு

இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம்.

தியேட்டர் ரிலீஸ்: தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராயன்’ திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது. ஆசிஃப் அலி, அமலா பால் நடித்துள்ள ‘லெவல் கிராஸ்’ (Level Cross) மலையாளப் படத்தை நாளை திரையரங்குகளில் காணலாம். மனோஜ் ஜோஷி நடித்துள்ள ‘தி யூபி ஃபைல்ஸ்’ (The UP Files) இந்திப் படம் நாளை வெளியாகிறது. ஷான் லெவி இயக்கியுள்ள ‘டெட்பூல் வொல்வரின்’ (Deadpool & Wolverine) ஹாலிவுட் திரைப்படத்தை நாளை பார்க்கலாம். ராம்பீமனாவின் ‘புருஷோத்தமடு’ (Purushothamudu) தெலுங்கு படம் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட உள்ளது.

நேரடி ஓடிடி ரிலீஸ்: விக்ரம் பாட் இயக்கியுள்ள பாலிவுட் ஹாரர் படமான ‘Bloody Ishq’ டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நாளை வெளியிடப்பட உள்ளது.

திரையரங்குகளுக்குப் பிறகான ஓடிடி ரிலீஸ்: குகன் இயக்கத்தில் வசந்த் ரவி, சத்யராஜ் நடித்த படம் ‘வெப்பன்’ ஆஹா ஓடிடியில் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. பிரசன்னா இயக்கத்தில் ரோஷன் மேத்திவ், தர்ஷனா நடித்த ‘பாரடைஸ்’ (Paradise) மனோரமா மேக்ஸ் ஓடிடியில் 26-ம் தேதி வெளியாகிறது. மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் வெளியான 100வது படம் ‘பையாஜி’ (Bhaiyya Ji). இதனை ஜீ5 ஓடிடியில் பார்க்கலாம். சோனியா அகர்வால் நடித்துள்ள ‘கிராண்ட் மா’ படம் ஆஹா ஓடிடியில் தற்போது காணக்கிடைக்கிறது.

இணைய தொடர்: ராதாமோகன் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள ‘சட்னி சாம்பார்’ வெப் சீரிஸ் ஹாட்ஸ்டாரில் நாளை வெளியாகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

2 days ago

ஓடிடி களம்

4 days ago

ஓடிடி களம்

5 days ago

ஓடிடி களம்

7 days ago

ஓடிடி களம்

9 days ago

ஓடிடி களம்

16 days ago

ஓடிடி களம்

18 days ago

ஓடிடி களம்

19 days ago

ஓடிடி களம்

22 days ago

ஓடிடி களம்

23 days ago

ஓடிடி களம்

25 days ago

ஓடிடி களம்

26 days ago

ஓடிடி களம்

26 days ago

ஓடிடி களம்

26 days ago

ஓடிடி களம்

26 days ago

மேலும்