ஹைதராபாத்: இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி குறித்து உருவாகியுள்ள ‘மாடர்ன் மாஸ்டர்ஸ்: ராஜமவுலி’ (Modern Masters: SS Rajamouli) என ஆவணப் படத்தின் ட்ரெய்லரை நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லரில் ராஜமவுலியை ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் உள்ளிட்டோர் புகழ்ந்து பேசியுள்ளனர்.
இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி, ‘பாகுபலி’ படத்தை இயக்கியதன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தார். அடுத்து அவர் இயக்கிய ‘ஆர்ஆர்ஆர்’ படமும் இந்தியா தாண்டி வெளிநாடுகளிலும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருதும் கிடைத்தது. இந்நிலையில், ராஜமவுலி பற்றிய ஆவணப்படம் உருவாகியுள்ளது. ‘மாடர்ன் மாஸ்டர்ஸ்: ராஜமவுலி’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஆக.2-ம் தேதி வெளியாக இருக்கிறது.
இதில் அவரது படமாக்கும் முறை, நேர்காணல், அவரை பற்றி ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், இந்திப் பட இயக்குநர் கரண் ஜோஹர், நடிகர்கள் பிரபாஸ், ராம்சரண், ராணா, ஜூனியர் என்.டி.ஆர் அளித்துள்ள பேட்டி ஆகியவையும் இடம் பெற்றுள்ளன. இந்த வாழ்க்கை வரலாற்று ஆவணப்படத்தை அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட், பிலிம் கம்பானியன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. ராகவ் கன்னா இயக்கியுள்ளார்.
இதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் பேசும் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், “மிகுந்த மரியாதையுடைய ராஜமவுலி, எதையும், யாருடன் வேண்டுமானாலும் இணைந்து பணியாற்றும் திறன் பெற்றவர்” என புகழ்கிறார். அனுபமா சோப்ரா இந்த நேர்காணல்களை எடுத்துள்ளார். அவர் வெறும் புகழுரையை மட்டுமே பதிவு செய்யாமல், ராஜமவுலியிடம் வேலை பார்ப்பதில் இருக்கும் சிக்கல்களையும் கேட்டறிகிறார். இது குறித்து பதிலளிக்கும் ஜூனியர் என்டிஆர், “அவரிடம் நீங்கள் எந்த விவாதத்தையும் செய்ய முடியாது. அவர் எதை சொல்கிறாரோ அதை செய்துவிட்டு நகர்ந்துவிட வேண்டும்” என்கிறார். ராஜமவுலியின் ஆவணப்படம் குறித்த இந்த ட்ரெய்லர் சுவாரஸ்யத்துடன் நம்பிக்கையூட்டுகிறது.
» “இந்தியன் 2 படம் நன்றாக இருக்கிறது” - ரஜினிகாந்த் கருத்து
» “ஃபஹத் ஃபாசிலின் வெறித்தனமான ரசிகன் ஆகிவிட்டேன்” - எஸ்.ஜே.சூர்யா பகிர்வு
மேலும், இது தொடர்பாக இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி, “கதை சொல்லலை நான் நேசிக்கிறேன். மேலும் என் வாழ்க்கையின் ஆதாரமான அதையே நான் தொடர்ந்து செய்ய விரும்புகிறேன். என்னுடைய வேலைக்கு பார்வையாளர்கள் காட்டும் அன்பும், போற்றுதலும் என்னை நெகிழச் செய்கிறது. நெஃப்ளிக்ஸ், அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட், ஃபிலிம் கம்பானியன் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்த ஆவணப்படத்தை பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. என்னுடைய திரை பயணத்தின் ஒரு பகுதியாக இருக்கும் ரசிகர்களுக்கும், அன்பு உள்ளங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் ஒரு வாய்ப்பு தான் இந்த ஆவணப்படம். பார்வையாளர்களின் ஆதரவு தான் என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிறது” என தெரிவித்துள்ளார். ட்ரெய்லர் வீடியோ:
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
2 days ago
ஓடிடி களம்
4 days ago
ஓடிடி களம்
5 days ago
ஓடிடி களம்
7 days ago
ஓடிடி களம்
9 days ago
ஓடிடி களம்
16 days ago
ஓடிடி களம்
18 days ago
ஓடிடி களம்
19 days ago
ஓடிடி களம்
22 days ago
ஓடிடி களம்
23 days ago
ஓடிடி களம்
25 days ago
ஓடிடி களம்
26 days ago
ஓடிடி களம்
26 days ago
ஓடிடி களம்
26 days ago
ஓடிடி களம்
26 days ago