சுந்தர்.சியின் ‘அரண்மனை 4’ ஜூன் 21-ல் ஓடிடியில் ரிலீஸ்!

By செய்திப்பிரிவு

சென்னை: சுந்தர்.சி இயக்கத்தில் உருவான ‘அரண்மனை 4’ திரைப்படம் வரும் ஜூன் 21-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கபட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் ஹன்சிகா, ஆன்ட்ரியா, வினய் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியானது ‘அரண்மனை’. 2016-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சித்தார்த் நடித்திருந்தார். 2021-ம் ஆண்டு இப்படத்தின் மூன்றாம் பாகம் வெளியானது. ஆர்யா, ராஷிகண்ணா, சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஹாரர் - காமெடி ஜானரில் சீரிஸாக வெளியிடப்பட்டு வரும் இப்படத்தின் நான்காவது பாகம் கடந்த மே 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, VTV கணேஷ், டெல்லி கணேஷ், ஜே பி, விச்சு, கேஜிஎஃப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் ஆதி படத்துக்கு இசையமைத்துள்ளார்.

சுந்தர்.சி தன்னுடைய முந்தைய ‘அரண்மனை’ சீரிஸ் படங்களில் இருந்த கவர்ச்சி உள்ளிட்ட அம்சங்களை தவிர்த்து, குழந்தைகள் மற்றும் குடும்பங்களை இலக்காக கொண்டு உருவாக்கிய இப்படம் கோடைக்கால விடுமுறையால் பலன் கொடுத்தது. ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடியைத் தாண்டி வசூலித்தது. இந்நிலையில் படம் வரும் ஜூன் 21-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

1 day ago

ஓடிடி களம்

2 days ago

ஓடிடி களம்

2 days ago

ஓடிடி களம்

3 days ago

ஓடிடி களம்

7 days ago

ஓடிடி களம்

10 days ago

ஓடிடி களம்

11 days ago

ஓடிடி களம்

14 days ago

ஓடிடி களம்

18 days ago

ஓடிடி களம்

20 days ago

ஓடிடி களம்

21 days ago

ஓடிடி களம்

23 days ago

ஓடிடி களம்

25 days ago

ஓடிடி களம்

1 month ago

ஓடிடி களம்

1 month ago

மேலும்