‘எலக்சன்’ முதல் ‘தலைமை செயலகம்’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

By செய்திப்பிரிவு

இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம்.

தியேட்டர் ரிலீஸ்: சந்தானம் நடித்துள்ள ‘இங்க நான் தான் கிங்கு’, விஜய்குமாரின் ‘எலக்சன்’, யாஷிகா ஆனந்தின், ‘படிக்காத பக்கங்கள்’ மற்றும் ‘கன்னி’ ஆகிய தமிழ்படங்கள் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகின்றன.

பிருத்விராஜின் ‘குருவாயூர்அம்பலநடையில்’, ரதீஷ்பாலகிருஷ்ணனின் ‘சுரேஷின்டேயும் சுமலதாயுதேயும் ஹிருதயஹரியா ப்ரணயகதா’ (Sureshinteyum Sumalathayudeyum Hridayahariyaya Pranayakatha) மலையாள படங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

மரிசா அபேலாவின் ‘பேக் டு ப்ளாக்’ ஹாலிவுட் படம் நாளை வெளியாகிறது.

ஓடிடி ரிலீஸ்: Thelma the Unicorn’ ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் நேரடியாக வெள்ளிக்கிழமை வெளியாகிறது.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் தற்போது காணக்கிடைக்கிறது. கலையரசனின் ‘ஹாட் ஸ்பாட்’ படத்தை ஆஹா ஓடிடியில் வெள்ளிக்கிழமை காணமுடியும். சந்தோஷ் ஜெயக்குமாரின் ‘தி பாய்ஸ்’ ஆஹா ஓடிடியிவில் காணக்கிடைக்கிறது.

சைத்ராவின் ‘ப்ளிங்க்’ (Blink) கன்னட படத்தை அமேசான் ப்ரைமில் காணலாம். ‘மேடம் வெப்’ ஹாலிவுட் படம் நெட்ப்ளிக்ஸில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சுதிப்டோ சென்னின் ‘பாஸ்டர் தி நக்சல் ஸ்டோரி’ (Bastar: The Naxal Story) ஜீ5 ஓடிடியில் நாளை வெளியாக உள்ளது.

இணைய தொடர்கள்: வசந்தபாலனின் ‘தலைமை செயலகம்’ வெப்சீரிஸ் ஜீ5 ஓடிடி தளத்தில் நாளை வெளியாக உள்ளது. ராஜமவுலி தயாரித்துள்ள ‘பாகுபலி: க்ரவுன் ஆஃப் ப்ளட்’ (Baahubali: Crown of Blood) இந்தி தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

2 hours ago

ஓடிடி களம்

3 hours ago

ஓடிடி களம்

1 day ago

ஓடிடி களம்

5 days ago

ஓடிடி களம்

7 days ago

ஓடிடி களம்

9 days ago

ஓடிடி களம்

11 days ago

ஓடிடி களம்

16 days ago

ஓடிடி களம்

17 days ago

ஓடிடி களம்

19 days ago

ஓடிடி களம்

20 days ago

ஓடிடி களம்

23 days ago

ஓடிடி களம்

30 days ago

ஓடிடி களம்

1 month ago

ஓடிடி களம்

1 month ago

மேலும்