வாஷிங்டன்: ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடரில் கெவன் லானிஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகர் இயன் கெல்டர் காலமானார். அவருக்கு வயது 74.
உடல்நலக் குறைவு காரணமான உயிரிழந்த அவருக்கு ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவரது கணவரும் நடிகருமான பென் டேனியல்ஸ், “இது மிகப்பெரிய சோகம். சுக்குநூறாக நொறுங்கிய இதயத்துடன் என்னுடைய அன்பு கணவரும், என் வாழ்க்கைத் துணையுமான இயன் கெல்டரின் மறைவுச் செய்தியை இந்த பதிவின் மூலம் தெரிவிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
பென் டேனியல்ஸில் இந்தப் பதிவில் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
1991-ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் ஆர்.ஆர். மார்ட்டின் என்பவர் எழுதிய ‘A Song of Ice and Fire’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட தொடர் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’. இத்தொடரின் முதல் எபிசோட், கடந்த 2011-ம் ஆண்டு வெளியானது.
» கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படத்தில் சிலம்பரசன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
» “அமிதாப்புக்குப் பிறகு நான் இல்லாமல் வேறு யார்?” - ட்ரோல்களுக்கு கங்கனா பதிலடி
உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற இத்தொடர், 2019 ஆம் ஆண்டு 8-வது சீசனோடு நிறைவடைந்ததுதற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு ஜியோ சினிமாஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
5 hours ago
ஓடிடி களம்
3 days ago
ஓடிடி களம்
4 days ago
ஓடிடி களம்
4 days ago
ஓடிடி களம்
5 days ago
ஓடிடி களம்
9 days ago
ஓடிடி களம்
11 days ago
ஓடிடி களம்
13 days ago
ஓடிடி களம்
16 days ago
ஓடிடி களம்
20 days ago
ஓடிடி களம்
21 days ago
ஓடிடி களம்
23 days ago
ஓடிடி களம்
25 days ago
ஓடிடி களம்
27 days ago
ஓடிடி களம்
1 month ago