‘தி ஃபேமிலிமேன் 3’ ஷூட்டிங் தொடங்கியது

By செய்திப்பிரிவு

மும்பை: ராஜ் மற்றும் டீகே இயக்கத்தில் 2019-ம் ஆண்டு அமேசான் பிரைமில் வெளியான ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் வெப் தொடர், ‘தி ஃபேமிலிமேன்’. மனோஜ் பாஜ்பாய், காந்த் திவாரி என்ற ஸ்பையாக நடித்திருந்தார். பிரியாமணி, நீரஜ் மாதவ், சரத் கேல்கர் உட்பட பலர் நடித்த இந்தத் தொடர் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, இதன் இரண்டாவது சீசன் ‘தி ஃபேமிலிமேன் 2’ என்ற பெயரில் உருவானது.

இதில் சமந்தா, ஈழத்தைச் சேர்ந்த இயக்கத்துப் பெண்ணாக நடித்திருந்தார். இதன் கதை தமிழ்நாட்டில் நடப்பது போலவும் அமைக்கப்பட்டிருந்தது. கடும் விமர்சனத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்திய இந்தத் தொடரும் வரவேற்பைப் பெற்றது. இதன் மூன்றாவது சீசன் விரைவில் தொடங்க இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. மனோஜ் பாஜ்பாய், ஷரிப் ஹாஸ்மி, ஸ்ரேயா தன்வந்தரி உட்பட பலர் நடிக்கின்றனர். ராஜ் மற்றும் டீகே இயக்கும் இதன் கதை, திரைக்கதை வசனத்தை இவர்களோடு சேர்ந்து சுமன்குமாரும் எழுதியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

3 days ago

ஓடிடி களம்

4 days ago

ஓடிடி களம்

5 days ago

ஓடிடி களம்

7 days ago

ஓடிடி களம்

10 days ago

ஓடிடி களம்

17 days ago

ஓடிடி களம்

18 days ago

ஓடிடி களம்

19 days ago

ஓடிடி களம்

22 days ago

ஓடிடி களம்

23 days ago

ஓடிடி களம்

25 days ago

ஓடிடி களம்

26 days ago

ஓடிடி களம்

26 days ago

ஓடிடி களம்

26 days ago

ஓடிடி களம்

27 days ago

மேலும்