‘ரத்னம்’ முதல் ‘ஃபேமிலி ஸ்டார்’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

By செய்திப்பிரிவு

இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம்.

தியேட்டர் ரிலீஸ்: விஷால் நடித்துள்ள ‘ரத்னம்’ திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது. எம்.எஸ்.பாஸ்கரின் ‘ஒரு நொடி’, மற்றும் ‘இங்கு மிருகங்கள் வாழும் இடம்’ ஆகிய திரைப்படங்களும் நாளை வெளியிடப்பட உள்ளன.

திலீப்பின் ‘பவி கேர்டேக்கர்’ (pavi caretaker) மலையாளப்படமும், ‘ருஸ்லான்’ இந்திப் படத்தையும் நாளை காணலாம். ‘லேட் நைட் வித் டெவில்’ (late night with the devil), ‘சேலஞ்சர்ஸ்’ (Challengers) ஆகிய ஹாலிவுட் படங்கள் திரைக்கு வருகின்றன.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாக்குர் நடித்துள்ள ‘ஃபேமிலி ஸ்டார்’ தெலுங்கு படத்தை நெட்ஃப்ளிக்ஸில் நாளை காணலாம். திரவ் நடித்துள்ள ‘வெப்பம் குளிர் மழை’ ஆஹா ஓடிடியில் தற்போது காணக்கிடைக்கிறது.

கோபிசந்தின் ‘பீமா’ டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியிடப்பட்டுள்ளது. அனுபமா பரமேஸ்வரனின் ‘தில்லு ஸ்கோயர்’ தெலுங்கு படத்தை வெள்ளிக்கிழமை நெட்ஃப்ளிக்ஸில் பார்க்க முடியும். வித்யூத் ஜம்வாலின் ‘க்ராக்’ இந்திப் படம் ஹாட்ஸ்டாரில் நாளை வெளியாக உள்ளது.

இணைய தொடர்: அனுஷ்கா சென் நடித்துள்ள ‘தில் தோஸ்தி டையலமா’ (Dil Dosti Dilemma) இந்தி தொடர் அமேசான் ப்ரைம் ஓடிடியில் தற்போது காணக்கிடைக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

5 hours ago

ஓடிடி களம்

3 days ago

ஓடிடி களம்

4 days ago

ஓடிடி களம்

4 days ago

ஓடிடி களம்

5 days ago

ஓடிடி களம்

9 days ago

ஓடிடி களம்

11 days ago

ஓடிடி களம்

13 days ago

ஓடிடி களம்

16 days ago

ஓடிடி களம்

20 days ago

ஓடிடி களம்

21 days ago

ஓடிடி களம்

23 days ago

ஓடிடி களம்

25 days ago

ஓடிடி களம்

27 days ago

ஓடிடி களம்

1 month ago

மேலும்