‘ரெபல்’ முதல் ‘ஓப்பன்ஹெய்மர்’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

By செய்திப்பிரிவு

இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம்.

தியேட்டர் ரிலீஸ்: ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள ‘ரெபல்’ தமிழ் படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. ஸ்ரீவிஷ்ணுவின் ‘ஓம் பீம் புஷ்’ (Om Bheem Bush) தெலுங்கு படமும், செம்பன் வினோத்தின் ‘அச்சகல்லகொக்கன்’ (anchakallakokkan) மலையாள படத்தையும் வெள்ளிக்கிழமை காணலாம்.

ரன்தீப் ஹூடாவின் ‘ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்’ இந்திப்படம் நாளை வெளியிடப்பட உள்ளது. சைமன் செல்லன் ஜோன்ஸின் ‘ஆர்தர் தி கிங்’ (Arthur the King) ஹாலிவுட் படத்தை நாளை காண முடியும்.

நேரடி ஓடிடி ரிலீஸ்: சாரா அலிகானின் ‘ஏ வாதா மேரா வாதா’ (Ae Watan Mere Watan) இந்திப் படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: கிறிஸ்டோஃபர் நோலனின் ‘ஓப்பன்ஹெய்மர்’ ஹாலிவுட் படம் ஜியோ சினிமாவில் தற்போது காணக்கிடைக்கிறது. ஹ்ரித்திக் ரோஷனின் ‘பைட்டர்’ நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது.

ஜெயராமின் ‘ஆபிரகாம் ஓஸ்லர்’ மலையாளப்படத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் தற்போது காணலாம். வினய் ராஜ்குமாரின் ‘ஒன்டு சரள ப்ரேமகதா’ (Ondu Sarala Premakathe) கன்னட படத்தை அமேசான் ப்ரைமில் பார்க்க முடியும்.

ரக்ஷன் நடித்துள்ள ‘மறக்குமா நெஞ்சம்’ அமேசான் ப்ரைமில் காணக்கிடைக்கிறது.

இணைய தொடர்கள்: ஹன்சல் மேத்தா தயாரித்துள்ள ‘லூட்டரே’ (Lootere) இந்தித் தொடரை ஹாட்ஸ்டார் ஓடிடியில் நாளை பார்க்க முடியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

1 day ago

ஓடிடி களம்

3 days ago

ஓடிடி களம்

4 days ago

ஓடிடி களம்

6 days ago

ஓடிடி களம்

8 days ago

ஓடிடி களம்

15 days ago

ஓடிடி களம்

17 days ago

ஓடிடி களம்

18 days ago

ஓடிடி களம்

21 days ago

ஓடிடி களம்

21 days ago

ஓடிடி களம்

24 days ago

ஓடிடி களம்

25 days ago

ஓடிடி களம்

25 days ago

ஓடிடி களம்

25 days ago

ஓடிடி களம்

25 days ago

மேலும்