ஹ்ரித்திக் ரோஷனின் ‘ஃபைட்டர்’ வியாழக்கிழமை ஓடிடியில் ரிலீஸ்!

By செய்திப்பிரிவு

சென்னை: ஹ்ரித்திக் ரோஷன் நடித்துள்ள ‘ஃபைட்டர்’ திரைப்படம் வியாழக்கிழமை ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் குடியரசு தினத்தையொட்டி கடந்த ஜனவரி 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘ஃபைட்டர்’. ‘வார்’, ‘பதான்’ படங்களை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தீபிகா படுகோன், அனில்கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை விஷால் சேகர் இசையமைத்துள்ளார்.

ரூ.250 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. பெரிய அளவில் வரவேற்பு இல்லாததால் படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூலை குவித்தாக தகவல் வெளியானது.

தேசபற்று, காஷ்மீர், பாகிஸ்தான் பிரச்சினை, உள்ளிட்ட வழக்கமான டெம்ப்ளேட்டுகளால் படம் பெரிய அளவில் கவனம் பெறவில்லை. அதேசமயம் சாகச காட்சிகள் பாராட்டு பெற்றன. இந்நிலையில் இப்படம் நாளை (மார்ச் 21) நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

12 mins ago

ஓடிடி களம்

29 mins ago

ஓடிடி களம்

23 hours ago

ஓடிடி களம்

4 days ago

ஓடிடி களம்

7 days ago

ஓடிடி களம்

9 days ago

ஓடிடி களம்

11 days ago

ஓடிடி களம்

16 days ago

ஓடிடி களம்

17 days ago

ஓடிடி களம்

18 days ago

ஓடிடி களம்

20 days ago

ஓடிடி களம்

23 days ago

ஓடிடி களம்

30 days ago

ஓடிடி களம்

1 month ago

ஓடிடி களம்

1 month ago

மேலும்