இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம்.
தியேட்டர் ரிலீஸ்: ஊர்வசி நடித்துள்ள ‘J.பேபி’, ஹன்சிகாவின் ‘கார்டியன்’, சார்லியின் ‘அரிமாபட்டி சக்திவேல்’, ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’, ‘சிங்கப்பெண்ணே’ ஆகிய தமிழ் படங்கள் வெள்ளிக்கிழமை (மார்ச் 8) திரையரங்குகளில் வெளியாகிறது.
கோபிசந்தின் ‘பீமா’, விஷ்வாக் சென்னின் ‘காமி’ (Gaami) ஆகிய தெலுங்கு படங்களும் நாளை வெளியிடப்பட உள்ளன. அஜய் தேவ்கன், ஜோதிகா, மாதவனின் ‘சைத்தான்’ இந்தி படத்தை நாளை திரையரங்குகளில் காண முடியும்.
நேரடி ஓடிடி ரிலீஸ்: ரித்திகா சிங் நடித்துள்ள ‘வலரி’ (Valari) படம் Etv Win ஓடிடி தளத்தில் நாளை வெளியிடப்பட உள்ளது.
» ‘அனிமல்’ வெற்றி: திருப்பதியில் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா மொட்டையடித்து சாமி தரிசனம்
» 4-வது பெண் குழந்தைக்கு தாய் ஆனார் ‘வொண்டர் வுமன்’ கால் கடோட் - பிரபலங்கள் வாழ்த்து
திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’ நெட்ஃப்ளிக்ஸில் நாளை வெளியாகிறது. விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடித்துள்ள ‘மெரி கிறிஸ்துமஸ்’ நெட்ஃப்ளிக்ஸில் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.
ஜெயராமின் ‘ஆபிரகாம் ஓஸ்லர்’ மலையாள படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியிலும், டோவினோ தாமஸின் ‘அன்வேஷிப்பின் கண்டேதும்’ நெட்ஃப்ளிக்ஸிலும் நாளை வெளியிடப்பட உள்ளது.
தேஜா சஜ்ஜாவின் ‘ஹனுமான்’ தெலுங்கு படம் ஜீ5 ஓடிடியில் வெளியிடப்பட உள்ளது. பாவனா, இந்திரன்ஸ், ஊர்வசி, ஹனி ரோஸின் ‘ராணி’ திரைப்படம் தற்போது மனோரமா மேக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.
இணைய தொடர்கள்: அனுமோல் நடித்துள்ள ‘ஹார்ட் பீட்’ (heart beat) தமிழ் இணையத்தொடர் ஹாட்ஸ்டார் ஓடிடியில் நாளை வெளியிடப்பட உள்ளது. இம்ரான் ஹாஷ்மியின் ‘ஷோ டைம்’ இந்தி தொடரை ஹாட்ஸ்டாரில் நாளை காணலாம்.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
1 day ago
ஓடிடி களம்
2 days ago
ஓடிடி களம்
2 days ago
ஓடிடி களம்
3 days ago
ஓடிடி களம்
7 days ago
ஓடிடி களம்
10 days ago
ஓடிடி களம்
11 days ago
ஓடிடி களம்
14 days ago
ஓடிடி களம்
19 days ago
ஓடிடி களம்
20 days ago
ஓடிடி களம்
21 days ago
ஓடிடி களம்
23 days ago
ஓடிடி களம்
26 days ago
ஓடிடி களம்
1 month ago
ஓடிடி களம்
1 month ago