சென்னை: சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அமரன்’ திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘அமரன்’. இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். ‘ரங்கூன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்துக்கு, ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் டைட்டில் டீசரை, சமீபத்தில் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளன்று படக்குழு வெளியிட்டது.
ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் மற்றும் ராகுல் சிங் மற்றும் ஷிவ் அரூர் எழுதிய ‘இண்டியா’ஸ் மோஸ்ட் ஃபியர்லஸ்: ட்ரூ ஸ்டோரிஸ் ஆஃப் மாடர்ன் மிலிட்டரி’ புத்தகத்தின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகிறது. இதில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்கிறார்.
இந்த நிலையில், ’அமரன்’ படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் ரூ.55 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் இதுவே அதிக தொகைக்கு விற்பனையாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்பு வெளியான சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தின் டிஜிட்டல் உரிமையை விட இரண்டு மடங்கு தொகைக்கு ‘அமரன்’ விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இறுதிகட்டப் பணிகள் முடிந்து இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
ஓடிடி களம்
1 day ago
ஓடிடி களம்
4 days ago
ஓடிடி களம்
7 days ago
ஓடிடி களம்
9 days ago
ஓடிடி களம்
11 days ago
ஓடிடி களம்
16 days ago
ஓடிடி களம்
17 days ago
ஓடிடி களம்
18 days ago
ஓடிடி களம்
20 days ago
ஓடிடி களம்
23 days ago
ஓடிடி களம்
30 days ago
ஓடிடி களம்
1 month ago
ஓடிடி களம்
1 month ago