மோகன்லாலின்‘நேரு’ திரைப்படம் ஜன.23-ல் ஓடிடியில் ரிலீஸ்

By செய்திப்பிரிவு

கொச்சி: மோகன்லால் நடித்துள்ள ‘நேரு’ (neru) திரைப்படம் வரும் ஜனவரி 23-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜீது ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள மலையாள படம் ‘நேரு’. ஆண்டனி பெரும்பாவூர் இப்படத்தை தயாரித்துள்ளார். பிரியாமணி, அனஸ்வரா ராஜன், சித்திக், ஜெகதீஸ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு விஷ்ணு ஷ்யாம் இசையமைத்துள்ளார்.

கடந்த டிசம்பர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. இதன் எதிரொலியாக படம் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இப்படம் ஜனவரி 23-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மோகன்லால் ரசிகர்களுக்கு மற்றொரு ட்ரீட்டாக அவர் நடித்துள்ள ‘மலைக்கோட்டை வாலிபன்’ மலையாள படம் ஜனவரி 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

4 hours ago

ஓடிடி களம்

5 hours ago

ஓடிடி களம்

1 day ago

ஓடிடி களம்

5 days ago

ஓடிடி களம்

7 days ago

ஓடிடி களம்

9 days ago

ஓடிடி களம்

12 days ago

ஓடிடி களம்

16 days ago

ஓடிடி களம்

17 days ago

ஓடிடி களம்

19 days ago

ஓடிடி களம்

21 days ago

ஓடிடி களம்

23 days ago

ஓடிடி களம்

30 days ago

ஓடிடி களம்

1 month ago

ஓடிடி களம்

1 month ago

மேலும்