ஓடிடியில் வெளியானது மம்மூட்டி - ஜோதிகாவின் ‘காதல் தி கோர்’

By செய்திப்பிரிவு

சென்னை: மம்மூட்டி - ஜோதிகா நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘காதல் தி கோர்’ மலையாள படம் ஓடிடியில் தற்போது காணக் கிடைக்கிறது.

கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான மலையாள படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற இப்படத்தை இயக்குநர் ஜியோ பேபி இயக்கியிருந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கியுள்ள புதிய படம் ‘காதல் தி கோர்’. மம்மூட்டியுடன் நடிகை ஜோதிகா இணைந்து நடித்துள்ளார். படத்துக்கு மாத்யூஸ் புலிக்கன் இசையமைத்துள்ளார்.

இப்படம் கடந்த நவம்பர் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தில் நடிகர் மம்மூட்டி தன்பாலின ஈர்ப்பாளராக நடித்திருந்தது பெரும் பாராட்டைப் பெற்றது. ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் உலக அளவில் ரூ.20 கோடி வரை வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகி தற்போது காணக்கிடைக்கிறது. மலையாளம் தவிர்த்து, தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் படத்தைக் காண முடியும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE