நானியின் ‘ஹாய் நான்னா’ ஜன.4-ல் ஓடிடியில் ரிலீஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: நானி நடித்துள்ள ‘ஹாய் நான்னா’ படம் ஜனவரி 4-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. வழக்கமான தெலுங்கு மசாலா பாணியை தவிர்த்து தொடர்ந்து நல்ல கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருபவர். அவர் நடிப்பில் வெளியான ‘ஜெர்ஸி’, ‘கேங் லீடர்’, ‘ஷ்யாம் சிங்கா ராய்’ உள்ளிட்ட படங்கள் பெரும் வரவேற்பை பெற்றவை. அந்த வகையில் அவர் நடித்துள்ள 30-வது படமான ‘ஹாய் நான்னா’ கடந்த டிச.7-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

மிருணாள் தாகூர் நாயகியாக நடிக்கும் இப்படத்தை வைரா எண்டர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ளது. ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் ரூ.70 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது. இந்நிலையில், இப்படம் வரும் ஜனவரி 4-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE