“பேரில்லூர் பிரீமியர் லீக்” மலையாளம் வெப் சீரிஸ் ஜன.5-ல் ஓடிடியில் வெளியாகிறது

By செய்திப்பிரிவு

சென்னை: டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் மூன்றாவது மலையாள சீரிஸ் “பேரில்லூர் பிரீமியர் லீக்” ஜனவரி 5-ல் வெளியாகிறது.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சமீபத்தில் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மலையாள ஒரிஜினல் சீரிஸான ​​“பேரில்லூர் பிரீமியர் லீக்” சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டது. அரசியலை இதயம் வருடும் நகைச்சுவை கலந்து சொல்லும் வகையில் இந்த சீரிஸ் வெளிவந்துள்ளது. இந்த சீரிஸ் வரும் ஜனவரி 5-ம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது.

இரண்டு நிமிடங்கள் கொண்ட இந்த டிரெய்லரில், ஒரு கிராமம் அதன் மனிதர்கள் அவர்களிடையேயான உறவுகள், அரசியல் வேடிக்கைகள், சிரிக்க வைக்கும் நகைச்சுவையின் கலவையாக “பேரில்லூர் பிரீமியர் லீக்” ட்ரெய்லர் உள்ளது. நிகிலா விமல் மற்றும் சன்னி வெய்னுடன், இந்தத் தொடரில் விஜயராகவன், அஜு வர்கீஸ், அசோகன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் இதில் நடித்துள்ளனர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு பேரில்லூர் பிரீமியர் லீக்கை ரசிக்கும்படியாக உள்ளது.

E4 என்டர்டெயின்மென்ட் பேனரில் முகேஷ் R மேத்தா மற்றும் CV சாரதி தயாரித்துள்ள ‘பேரில்லூர் பிரீமியர் லீக்’ சீரிஸை புகழ் பெற்ற இயக்குநர் பிரவீன் சந்திரன் இயக்கியுள்ளார், தீபு பிரதீப் இந்த சீரிஸை எழுதியுள்ளார். ஒளிப்பதிவு இயக்குநரான அனூப் வி ஷைலஜா, கிராமப்புற கேரளாவின் சாரத்தை அசத்தலான காட்சிகளுடன் படம்பிடித்துள்ளார். அதே நேரத்தில் பவன் ஸ்ரீ குமாரின் தலைசிறந்த எடிட்டிங் இக்கதையைத் திரையில் அழகாக உயிர்ப்பிக்கிறது. முஜீப் மஜீதின் இசை இந்த சீரிஸுக்கு மெருகேற்றுயிருக்கிறது.

‘பேரில்லூர் பிரீமியர் லீக்’ 7 வெவ்வேறு மொழிகளில் (மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி மற்றும் பெங்காலி) ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்கள் தங்கள் சொந்த மொழியில் இந்த நகைச்சுவை சீரிஸை காணலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

3 hours ago

ஓடிடி களம்

3 days ago

ஓடிடி களம்

3 days ago

ஓடிடி களம்

5 days ago

ஓடிடி களம்

5 days ago

ஓடிடி களம்

10 days ago

ஓடிடி களம்

13 days ago

ஓடிடி களம்

16 days ago

ஓடிடி களம்

17 days ago

ஓடிடி களம்

18 days ago

ஓடிடி களம்

18 days ago

ஓடிடி களம்

24 days ago

ஓடிடி களம்

26 days ago

ஓடிடி களம்

26 days ago

ஓடிடி களம்

26 days ago

மேலும்