சென்னை: வீரப்பனின் வாழ்க்கையை விவரிக்கும் ‘கூஸ் முனிசாமி வீரப்பன்’ ஆவணத் தொடரின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் ‘The Hunt for Veerappan’ ஆவணத் தொடர் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இதனை செல்வமணி செல்வராஜ் இயக்கியிருந்தார். இந்தத் தொடர் பரவலான வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இதேபோல வீரப்பனின் வாழ்க்கையை ஆவணமாக விவரிக்கும் புதிய தொடர் ஒன்று ஜீ5 ஓடிடி தளத்தில் டிசம்பர் 8-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த ஆவணத் தொடருக்கு ‘கூஸ் முனுசாமி வீரப்பன்’ என பெயரிடப்பட்டுள்ளது. ஜெயச்சந்திர ஹாஷ்மி, சரத் ஜோதி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோரில் எழுத்தில் உருவாகியுள்ள இந்தத் தொடரை சரத் ஜோதி இயக்கியுள்ளார். இதன் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? - நக்கீரன் கோபால், சீமான், நடிகை ரோகிணி உள்ளிட்ட பலரும் வீரப்பன் குறித்து பேச நடுநடுவே வீரப்பனின் முகத்தை காட்டாத காட்சிகள் வந்து செல்கின்றன. ஓரிடத்தில், ‘காவல்துறை எழுதியிருப்பதை தான் வீரப்பன் கதையாக பலரும் கூறியுள்ளனர். ஆனால், வீரப்பன் வாய்மொழியிலேயே என்ன நடந்து என சொல்ல வைக்க வேண்டுமல்லவா?’ என நக்கீரன் கோபால் கூறியதும், வீரப்பன் பேசும் காட்சிகள் காட்டப்படுகின்றன.
இந்த இடத்தில் மற்ற ஆவணத் தொடர்களிலிருந்து விலகி நிற்கிறது இந்தத் தொடர். வீரப்பன் பேச தொடங்கும்போது ட்ரெய்லர் முடிவது ஆர்வத்தை கூட்டுகிறது. தொடர் டிசம்பர் 8-ம் தேதி தமிழ், கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் ஜீ5 தளத்தில் வெளியாவது குறிப்பிடத்தக்கது. ட்ரெய்லர் வீடியோ:
» ஓடிடி திரை அலசல் | The Railway Men: பதைபதைக்க வைக்கும் ஒரு பேரழிவின் அதிர்வுகள்!
» ‘காதல் தி கோர்’ முதல் ‘லியோ’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
9 hours ago
ஓடிடி களம்
3 days ago
ஓடிடி களம்
4 days ago
ஓடிடி களம்
5 days ago
ஓடிடி களம்
5 days ago
ஓடிடி களம்
10 days ago
ஓடிடி களம்
13 days ago
ஓடிடி களம்
16 days ago
ஓடிடி களம்
17 days ago
ஓடிடி களம்
18 days ago
ஓடிடி களம்
18 days ago
ஓடிடி களம்
24 days ago
ஓடிடி களம்
26 days ago
ஓடிடி களம்
26 days ago
ஓடிடி களம்
26 days ago