‘காதல் தி கோர்’ முதல் ‘லியோ’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

By செய்திப்பிரிவு

இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம்.

தியேட்டர் ரிலீஸ்: விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ நாளை (நவ.24) வெளியாகலாம் (இதுவரை டிக்கெட் புக்கிங் ஓப்பன் ஆகவில்லை). சந்தானத்தின் ‘80ஸ் பில்டப்’, ரியோ ராஜ்ஜின் ‘ஜோ’, வித்தார்த்தின் ‘குய்கோ’, ‘லாக்கர்’, ‘சில நொடிகள்’ ஆகிய தமிழ் படங்கள் வெள்ளிக்கிழமை வெளியாகின்றன. மம்மூட்டி - ஜோதிகாவின் ‘காதல் தி கோர்’ மலையாள படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. டோவினோ தாமஸின் ‘அத்ரிஷ்ய ஜாலங்கள்’ (Adrishya Jalakangal) மலையாள படம் நாளை வெளியிடப்பட உள்ளது.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: விஜய்யில் ‘லியோ’ நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் நாளை வெளியிடப்பட உள்ளது. ஜோஜூ ஜார்ஜ் - ஐஸ்வர்யா ராஜேஷின் ‘புலி மடா’ நெட்ஃப்ளிக்ஸில் காணக்கிடைக்கிறது. தங்கர் பச்சானின் ‘கருமேகங்கள் கலைகின்றன’ அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது. ஹாரர் படமான ‘டீமன்’ ஆஹா ஓடிடியிலும், பிரேம்ஜியின் ‘சத்திய சோதனை’ சோனி லிவ் ஓடிடியிலும் நாளை வெளியிடப்பட உள்ளன. பங்கஜ் திரிபாதியின் ‘Fukrey3’ இந்திப் படம் ப்ரைமில் வெளியாக உள்ளது.

இணைய தொடர்: ஆர்யா நடித்துள்ள ‘தி வில்லேஜ்’ தொடர் அமேசான் ப்ரைமில் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. ‘ஸ்குவிட் கேம் 2’ நெட்ஃப்ளிக்ஸில் தற்போது காணக்கிடைக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE