ஜோஜு ஜார்ஜ் - ஐஸ்வர்யா ராஜேஷின் ‘புலிமடா’ நவ.23-ல் ஓடிடியில் ரிலீஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘புலிமடா’ மலையாளத் திரைப்படம் நவம்பர் 23-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு மம்மூட்டி - நயன்தாரா நடிப்பில் வெளியான ‘புதிய நியமம்’ மலையாள படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஏ.கே.சாஜன் இயக்கியுள்ள படம் ‘புலிமடா’. ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், செம்பன் வினோத், லிஜோ மோல் ஜோஸ், ஜாஃபர் இடுக்கி, ஜான் ஆண்டனி, சோனா நாயர், ஜீயோ பேபி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் கடந்த அக்டோபர் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்துக்கு இஷான் தேவ், அனில் ஜான்சன் இணைந்து இசையமைத்துள்ளனர். த்ரில்லர் ஜானரில் உருவான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில், இப்படம் வரும் 23-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை மலையாளம் தவிர்த்து தமிழ், தெலுங்கு,கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் அடுத்ததாக ‘ஆண்டனி’ மலையாள படம் அதே நவம்பர் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

11 hours ago

ஓடிடி களம்

1 day ago

ஓடிடி களம்

3 days ago

ஓடிடி களம்

5 days ago

ஓடிடி களம்

8 days ago

ஓடிடி களம்

10 days ago

ஓடிடி களம்

10 days ago

ஓடிடி களம்

11 days ago

ஓடிடி களம்

11 days ago

ஓடிடி களம்

13 days ago

ஓடிடி களம்

15 days ago

ஓடிடி களம்

16 days ago

ஓடிடி களம்

17 days ago

ஓடிடி களம்

19 days ago

ஓடிடி களம்

19 days ago

மேலும்