அடுத்த ஆண்டு வெளியாகிறது 'தி பாய்ஸ்' சீசன் 4! - புதிய போஸ்டர்கள் வெளியீடு

By செய்திப்பிரிவு

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமேசான் ப்ரைமில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘தி பாய்ஸ்’ வெப் தொடரின் நான்காவது சீசன் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு ‘தி பாய்ஸ்’ தொடரின் முதல் சீசன் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. மார்வெல், டிசி சூப்பர் ஹீரோக்களை நினைவூட்டும் கதாபாத்திரங்களை கொண்டு உருவாக்கப்பட்ட இத்தொடர் உலகமெங்கும் பெரும் வரவேற்பை பெற்றது. இதில் கார்ல் அர்பன் நடித்த பில்லி பட்சர் கதாபாத்திரமும், ஆண்டனி ஸ்டார் நடித்த ஹோம்லேண்டர் கதாபாத்திரமும் பிரபலமடைந்தன.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் சீசன் 3 வெளியாகியிருந்த நிலையில், இத்தொடரின் நான்காவது சீசன் எப்போது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்த நிலையில், தற்போது ‘தி பாய்ஸ்’ தொடரின் புதிய போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இத்தொடர் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேதி எதையும் படக்குழு அறிவிக்கவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

2 days ago

ஓடிடி களம்

4 days ago

ஓடிடி களம்

5 days ago

ஓடிடி களம்

7 days ago

ஓடிடி களம்

9 days ago

ஓடிடி களம்

16 days ago

ஓடிடி களம்

18 days ago

ஓடிடி களம்

19 days ago

ஓடிடி களம்

22 days ago

ஓடிடி களம்

23 days ago

ஓடிடி களம்

25 days ago

ஓடிடி களம்

26 days ago

ஓடிடி களம்

26 days ago

ஓடிடி களம்

26 days ago

ஓடிடி களம்

26 days ago

மேலும்