‘லியோ’ முதல் ‘பகவந்த் கேசரி’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

By செய்திப்பிரிவு

இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸான படங்கள் குறித்து பார்ப்போம்.

தியேட்டர் ரிலீஸ்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது. பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த் கேசரி’ தெலுங்கு படமும் இன்று வெளியாகியுள்ளது. கன்னடத்தில் சிவராஜ்குமாரின் ‘கோஸ்ட்’ திரைப்படம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ரவிதேஜாவின் ‘டைகர் நாகேஸ்வர ராவ்’ தெலுங்கு படமும், டைகர் ஷேராஃப் நடித்துள்ள ‘கானாபாத்’, திவ்யா கோஸ்லா குமாரின் ‘யாரியான் 2’ இந்தி படமும் நாளை (அக்.20) வெளியாகிறது.

நேரடி ஓடிடி ரிலீஸ்: பில்பர் இயக்கி நடித்துள்ள ‘ஓல்டு டாட்ஸ்’ (Old Dads) ஹாலிவுட் திரைப்படம் நாளை (அக்.20) நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: வெற்றி நடித்துள்ள ‘ரெட் சாண்டல்வுட்’ தமிழ் திரைப்படம் ஆஹா ஓடிடியில் நாளை காணக்கிடைக்கும். ஆயுஷ்மான் குர்ரானாவின் ‘ட்ரீம்கேர்ள் 2’ இந்தி திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் நாளை வெளியாகிறது. அந்தோணி ராமோஸின் ‘ட்ரான்ஸ்ஃபார்ஸ்: ரைஸ் ஆஃப் தி பீஸ்ட்’ (Transformers: Rise of the Beasts) ஹாலிவுட் படம் நாளை அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நாளை காணலாம்.

இணைய தொடர்கள்: வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள ‘மேன்சன் 24’ தெலுங்கு சீரிஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக்கிடைக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

5 hours ago

ஓடிடி களம்

5 hours ago

ஓடிடி களம்

1 day ago

ஓடிடி களம்

5 days ago

ஓடிடி களம்

7 days ago

ஓடிடி களம்

9 days ago

ஓடிடி களம்

12 days ago

ஓடிடி களம்

16 days ago

ஓடிடி களம்

17 days ago

ஓடிடி களம்

19 days ago

ஓடிடி களம்

21 days ago

ஓடிடி களம்

23 days ago

ஓடிடி களம்

30 days ago

ஓடிடி களம்

1 month ago

ஓடிடி களம்

1 month ago

மேலும்