பலாத்கார காட்சியில் நடித்தது ஏன்? - மெஹ்ரின் பிர்சாடா விளக்கம்

By செய்திப்பிரிவு

மும்பை: சுசீந்திரன் இயக்கிய ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மெஹ்ரின் பிர்சாடா. தொடர்ந்து ‘நோட்டா’, தனுஷின் ‘பட்டாஸ்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் நடித்து வரும் இவர், சுல்தான் ஆப் டெல்லி என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ள இதில், மவுனி ராய், வினய் பதக் உட்பட பலர் நடித்துள்ளனர். இதில் பாலியல் வன்கொடுமை காட்சி ஒன்றில் மெஹ்ரின் நடித்துள்ளார். இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து நடிகை மெஹ்ரின் சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “திருமணப் பந்தத்தில், கணவனால் நடத்தப்படும் பாலியல் வல்லுணர்வு காட்சியில் நடித்திருக்கிறேன். பல பெண்கள் சந்திக்கும் தீவிரமான பிரச்சினை இது. ஆனால், அதை ‘பாலியல் காட்சி’ என்று ஊடகங்கள் விவரிப்பதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. அந்த வார்த்தை தீவிரமான ஒன்றை சாதாரண விஷயமாக மாற்றி விடுகிறது. ஒரு நடிகராக, அந்தக் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்வது என் வேலை. அதனால் அந்தக் காட்சியில் நடித்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளேன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

4 hours ago

ஓடிடி களம்

5 hours ago

ஓடிடி களம்

1 day ago

ஓடிடி களம்

5 days ago

ஓடிடி களம்

7 days ago

ஓடிடி களம்

9 days ago

ஓடிடி களம்

11 days ago

ஓடிடி களம்

16 days ago

ஓடிடி களம்

17 days ago

ஓடிடி களம்

19 days ago

ஓடிடி களம்

21 days ago

ஓடிடி களம்

23 days ago

ஓடிடி களம்

30 days ago

ஓடிடி களம்

1 month ago

ஓடிடி களம்

1 month ago

மேலும்