அசோக் செல்வனின் ‘கேங்க்ஸ்’ சீரிஸை தயாரிக்கிறார் சௌந்தர்யா ரஜினி

By செய்திப்பிரிவு

சென்னை: சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் அசோக் செல்வன் நடிக்கும் ‘கேங்க்ஸ்’ இணைய தொடருக்கான பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கின.

‘கோச்சடையான்’ 3டி அனிமேஷன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா. நீண்ட இடைவெளிக்குப் பின் தற்போது மீண்டும் சினிமாவுக்கு திரும்பியிருக்கும் அவர் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்துடன் இணைந்து புதிய வெப் சீரிஸ் ஒன்றை தயாரிக்கிறார். ‘கேங்க்ஸ்’ என தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தத் தொடரை நோஹா ஆபிரஹாம் இயக்குகிறார். அசோக் செல்வன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தத் தொடரின் பணிகள் பூஜையுடன் சென்னையில் தொடங்கியுள்ளன. இது தொடர்பான அறிவிப்பை சௌந்தர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அசோக் செல்வனை பொறுத்தவரை ‘போர் தொழில்’ படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளார். இதையடுத்து இந்த வெப்சீரிஸில் நடிக்கிறார். மேலும் செப்டம்பர் 13-ம் தேதி திருநல்வேலியில் அசோக் செல்வனுக்கும் - கீர்த்தி பாண்டியனுக்கும் திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

3 days ago

ஓடிடி களம்

6 days ago

ஓடிடி களம்

7 days ago

ஓடிடி களம்

10 days ago

ஓடிடி களம்

14 days ago

ஓடிடி களம்

16 days ago

ஓடிடி களம்

17 days ago

ஓடிடி களம்

19 days ago

ஓடிடி களம்

21 days ago

ஓடிடி களம்

28 days ago

ஓடிடி களம்

30 days ago

ஓடிடி களம்

1 month ago

ஓடிடி களம்

1 month ago

ஓடிடி களம்

1 month ago

ஓடிடி களம்

1 month ago

மேலும்