பிரபல எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி எழுதிய நாவல், ’குற்றப்பரம்பரை’. புகழ்பெற்ற இந்த நாவலை இயக்குநர்கள் பாரதிராஜா, பாலா ஆகியோர் திரைப்படமாக்கத் திட்டமிட்டனர். இதற்கான பூஜையும் போடப்பட்டது. பிறகு சில காரணங்களால் அந்தப் படங்கள் தொடங்கப்படவில்லை.
இந்நிலையில் இந்த நாவல், இப்போது வெப் தொடராகிறது. டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாருக்காக உருவாகும் இந்த வெப் தொடரை சசிகுமார் இயக்குகிறார். வேல்ராஜ் தயாரித்து ஒளிப்பதிவு செய்கிறார். இதில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நாயகனாக நடிக்கிறார். சத்யராஜ், வேயண்ணா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுக்கான டெஸ்ட் ஷூட், தலக்கோணம் காட்டுப்பகுதியிலும் புதுச்சேரியிலும் நடந்துள்ளது. இதில் சத்யராஜ், சண்முகபாண்டியன் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், இந்தப் படத்தில் அனுராக் காஷ்யப் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்றும் ராணா மற்றொரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
2 days ago
ஓடிடி களம்
3 days ago
ஓடிடி களம்
4 days ago
ஓடிடி களம்
6 days ago
ஓடிடி களம்
9 days ago
ஓடிடி களம்
15 days ago
ஓடிடி களம்
17 days ago
ஓடிடி களம்
18 days ago
ஓடிடி களம்
21 days ago
ஓடிடி களம்
22 days ago
ஓடிடி களம்
24 days ago
ஓடிடி களம்
25 days ago
ஓடிடி களம்
25 days ago
ஓடிடி களம்
25 days ago
ஓடிடி களம்
25 days ago