சாந்தனு, ஹன்சிகா நடிக்கும் இயக்குநர் எம்.ராஜேஷின் ‘மை3’ (MY3) வெப் சீரிஸின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.
‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கின்ற பாஸ்கரன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் எம்.ராஜேஷ். கடந்த 2019-ம் ஆண்டு அவரது இயக்கத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் ‘மிஸ்டர் லோக்கல்’ படம் தோல்வியை தழுவியது. 2021-ல் அவர் இயக்கிய ‘வணக்கம்டா மாப்பிளை’ படமும் ரசிகர்களை கவரவில்லை. தற்போது அவர் ஜெயம் ரவியை வைத்து ‘ஜெஆர்30’ படத்தை இயக்கி வருகிறார்.
இதையடுத்து வெப் சீரிஸ் ஒன்றையும் இயக்குகிறார். இந்த வெப் சீரிஸுக்கு ‘மை3’ என தலைப்பிடப்பட்டுள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வெளியிடும் இந்தத் தொடரில் ஹன்ஷிகா மோத்வானி, முகேன் ராவ், சாந்தனு, ஜனனி , அஷ்னா ஜவேரி முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். ரொமான்டிக் காமெடி ஜானரில், ரோபோவின் காதலை நகைச்சுவையுடன் சொல்லும் சீரிஸாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. இந்த சீரிஸுக்கு கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் கணேசன் இசையமைத்துள்ளார். அஷிஷ் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார்.
» மாற்றுத்திறன் குழந்தைகளை மகிழவைத்த நடிகர் சூரி!
» “சந்திரயான் வெற்றியுறின் அது மானுட வெற்றி” - வைரமுத்து கருத்து
இதன் முதல் தோற்றத்தை பொறுத்தவரை ஹன்சிகா ரோபோவாகவும், சாந்தனு விஞ்ஞானி கெட்டப்பிலும் கூடவே முகேன் ராவும் உள்ளனர். இதன் டேக் லைன் ‘ஏ ரோபோடிக் லவ் ஸ்டோரி’. ரோபோடிக் காதல் கதைக்களத்தை கையிலெடுத்திருக்கும் எம்.ராஜேஷின் இந்த சீரிஸ் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடதக்கது.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
23 hours ago
ஓடிடி களம்
4 days ago
ஓடிடி களம்
7 days ago
ஓடிடி களம்
9 days ago
ஓடிடி களம்
11 days ago
ஓடிடி களம்
16 days ago
ஓடிடி களம்
17 days ago
ஓடிடி களம்
18 days ago
ஓடிடி களம்
20 days ago
ஓடிடி களம்
23 days ago
ஓடிடி களம்
30 days ago
ஓடிடி களம்
1 month ago
ஓடிடி களம்
1 month ago
ஓடிடி களம்
1 month ago
ஓடிடி களம்
1 month ago