‘ஜெயிலர்’ முதல் ‘மாவீரன்’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

By செய்திப்பிரிவு

இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம்.

தியேட்டர் ரிலீஸ்: ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. சிரஞ்சீவி நடித்துள்ள ‘போலா சங்கர்’ தெலுங்கு படம் நாளை (ஆகஸ்ட் 11) திரையரங்குகளில் வெளியாகிறது. அக்‌ஷய்குமாரின் ‘OMG 2’ பாலிவுட் படத்தை நாளை திரையரங்குகளில் காணலாம்.

நேரடி ஓடிடி ரிலீஸ்: அம்மு அபிராமி, வினோத் கிஷன் நடித்துள்ள ‘வான் மூன்று’ திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் நாளை (ஆகஸ்ட் 11) வெளியாகிறது. ஆலியா பட் நடித்துள்ள ஹாலிவுட் படமான ‘ஹார்ட் ஆஃப் ஸ்டோன்’ படத்தை நாளை முதல் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் காணலாம்.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ அமேசான் ப்ரைமில் நாளை வெளியிடப்பட உள்ளது. நீண்ட எதிர்பார்ப்புக்குள்ளான அசோக் செல்வனின் ‘போர்தொழில்’ படத்தை சோனி லிவ் ஓடிடியில் நாளை பார்க்கலாம். குஞ்சாகோ போபன், மடோனா சபாஸ்டின், அபர்ணா பாலமுரளி நடித்துள்ள ‘பத்மினி’ மலையாள படம் நாளை நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது. மேத்யூ தாமஸின் ‘நெய்மர்’ தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக்கிடைக்கிறது.

இணைய தொடர்கள்: ஆர்.ஜே.விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘இது வேற மாதிரி ஆஃபீஸ்’ தொடர் ஆஹாவில் தற்போது காணக்கிடைக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE