வீரப்பன் உருவான கதை - The Hunt For Veerappan டீசர் எப்படி?

By செய்திப்பிரிவு

சென்னை: சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிப்பதற்காக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டை தொடர்பான ‘The Hunt For Veerappan’ ஆவணப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி இந்த ஆவணப்பட சீரிஸ் வெளியாக உள்ளது. இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தத் தொடரை தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணப்பட சீரிஸ் குறித்து பேசியுள்ள இயக்குநர் செல்வமணி செல்வராஜ், “ஆண்டாண்டு காலமாக வீரப்பனின் கதையை நாம் கேட்டு வருகிறோம். ஆனால் யாருக்கும் அவர் எதற்காக இப்படியான ஒரு குற்றவாளியானார் என்பது தெரியாது. இன்னும் சமூகத்தின் ஒரு பகுதியினருக்கு அவர் ராபின் ஹூட் ஆக அறியப்படுகிறார். நுணுக்கமான ஆராய்ச்சியின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆவணத் தொடர் வீரப்பனின் சிக்கல்களையும் அவர் வாழ்வில் சொல்லப்படாத கதைகளையும் உண்மையையும் ஆழமாக பேசும்” என்றார்.

டீசர் எப்படி? - தற்போது வெளியாகியுள்ள இந்த ஆவணத் தொடரின் டீசரை பொறுத்தவரை, பின்னணியில் ஒலிக்கும் பாடலுக்கிடையே வீரப்பன் தொடர்பான செய்திகள் நடுவே நடுவே வந்து செல்கின்றன. ஆவணத்தொடர் என்பதால் பல்வேறு நிஜ சம்பவங்களையும் கோர்த்துள்ளனர். உதாரணமாக முன்னாள் உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானியின் பேட்டி ஒளிபரப்படுகிறது. அதில் அவர், “இது ஒட்டுமொத்த இந்தியாவுடன் தொடர்புடைய விவகாரம்” என்று பேசுகிறார். தொடர்ந்து வீரப்பன் ‘மனித உரு கொண்ட காட்டு விலங்கு’ போன்ற வசனங்கள் கவனம் பெறுகின்றன. மொத்த டீசர் பெரும்பாலும் பழைய விஷுவல்களை அடிப்படையாகொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 4-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் இதனை காணலாம். டீசர் வீடியோ:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE