ஆர்யா நடித்துள்ள ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ திரைப்படம் ஜூலை 7-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரித்துள்ளன. ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகை சித்தி இத்னானி நாயகியாக நடித்துள்ளார். பிரபு, பாக்யராஜ், சிங்கம்புலி, நரேன், தமிழ், மதுசூதன ராவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த ஜூன் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
மத நல்லிணக்கத்தை பேசிய வசனங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதம் கடந்த நிலையில் வரும் ஜூலை 7-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளன்று அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘போர் தொழில்’ படம் சோனி லிவ் ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
4 hours ago
ஓடிடி களம்
4 hours ago
ஓடிடி களம்
1 day ago
ஓடிடி களம்
5 days ago
ஓடிடி களம்
7 days ago
ஓடிடி களம்
9 days ago
ஓடிடி களம்
11 days ago
ஓடிடி களம்
16 days ago
ஓடிடி களம்
17 days ago
ஓடிடி களம்
19 days ago
ஓடிடி களம்
21 days ago
ஓடிடி களம்
23 days ago
ஓடிடி களம்
30 days ago
ஓடிடி களம்
1 month ago
ஓடிடி களம்
1 month ago