அசோக் செல்வன், சரத்குமார் நடித்துள்ள ‘போர் தொழில்’ திரைப்படம் ஜூலை 7-ம் தேதி ஓடிடியில் ரிலீஸாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத்குமார் நடித்துள்ள படம் ‘போர் தொழில்’. கடந்த ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தில் நிகிலா விமல், நிழல்கள் ரவி, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சரத்பாபு நடித்த கடைசி படமாக இப்படம் வெளியாகியிருந்தது.
படத்துக்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்திருந்தார். ரூ.7 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் படம் ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பின் காரணமாக ரூ.25 கோடியைத் தாண்டி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீரியல் கில்லர் கதையை விறுவிறுப்பு குறையாமல் திரைக்கதையாக்கியிருந்த விதமும், அசோக் செல்வன், சரத்குமாரின் நடிப்பில் ரசிகர்களிடையே பாராட்டை பெற்றது. இந்நிலையில், இப்படம் வரும் ஜூலை 7-ம் தேதி சோனி லிவ் ஓடிடியில் ரிலீசாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
3 days ago
ஓடிடி களம்
4 days ago
ஓடிடி களம்
5 days ago
ஓடிடி களம்
7 days ago
ஓடிடி களம்
10 days ago
ஓடிடி களம்
16 days ago
ஓடிடி களம்
18 days ago
ஓடிடி களம்
19 days ago
ஓடிடி களம்
22 days ago
ஓடிடி களம்
23 days ago
ஓடிடி களம்
25 days ago
ஓடிடி களம்
26 days ago
ஓடிடி களம்
26 days ago
ஓடிடி களம்
26 days ago
ஓடிடி களம்
26 days ago