டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘2018’ திரைப்படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை மலையாளம் தவிர்த்து, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் காணமுடியும்.
ஜூட் ஆந்தணி ஜோசப் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான மலையாள திரைப்படம் ‘2018’. இந்தப் படத்தில் டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லால், கலையரசன், நரேன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
நோபின் பால் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 2018-ல் கேரளா சந்தித்த பெருவெள்ளத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் மலையாளத்தில் அதிகபட்ச வசூல் சாதனை படைத்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
» கலகலப்பான கிராமத்துக் கதைக்களம் - பசுபதியின் ‘தண்டட்டி’ ட்ரெய்லர் எப்படி?
» ஹரிஷ் கல்யாணின் ‘எல்ஜிஎம்’ டீசரை புதன்கிழமை வெளியிடுகிறார் எம்.எஸ்.தோனி
படம் வெளியாகி இன்றுடன் 31 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை உலக அளவில் ரூ.176 கோடி வசூலை எட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் தமிழ், தெலுங்கில் படம் படம் வெளியானது. மலையாள சினிமாவில் அதிகபட்ச வசூலை குவித்துள்ள இந்தப் படம் தற்போது சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக இயக்குநர் ஜூட் ஆந்தணி ஜோசப் தனது ட்விட்டர் பக்கத்தில், “படம் வெளியாவதற்கு முன்பே எங்கள் மீது நம்பிக்கை வைத்த சோனி லிவ் ஓடிடி தளத்திற்கு நன்றி. படத்தை கொண்டாடிய அனைவருக்கும் நன்றி. திரையரங்கு உரிமையாளர்கள், பார்வையாளர்கள் தான் உண்மையான ஹீரோக்கள்” என பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
3 days ago
ஓடிடி களம்
6 days ago
ஓடிடி களம்
7 days ago
ஓடிடி களம்
10 days ago
ஓடிடி களம்
15 days ago
ஓடிடி களம்
16 days ago
ஓடிடி களம்
17 days ago
ஓடிடி களம்
19 days ago
ஓடிடி களம்
22 days ago
ஓடிடி களம்
28 days ago
ஓடிடி களம்
30 days ago
ஓடிடி களம்
1 month ago
ஓடிடி களம்
1 month ago
ஓடிடி களம்
1 month ago
ஓடிடி களம்
1 month ago