இந்த வாரம் திரையரங்குகளின் வெளியீட்டுக்குப்பிறகு பிறகு ஓடிடியில் முன்னணி திரைப்படங்கள் இன்று வெளியாகியுள்ளன. அவை என்னென்ன என்பது குறித்து பார்ப்போம்.
யாத்திசை: அறிமுக இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் சேயோன், சக்தி மித்ரன், ராஜலக்ஷ்மி, குருசோம சுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்த படம் ‘யாத்திசை’. கடந்த ஏப்ரல் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரேற்பை பெற்றது. பாண்டியர் - எயினர் குல வரலாற்றை புனைவு கலந்து சொல்லியிருக்கும் இப்படத்தை வீனஸ் இன்ஃபோடெயின்மென்ட், சிக்ஸ் ஸ்டார் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்தன. இப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக்கிடைக்கிறது.
சாகுந்தலம்: குணசேகர் இயக்கத்தில் சமந்தா தேவ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘சாகுந்தலம்’. குணா டீம்வொர்க் நிறுவனத்துடன் இணைந்து தில்ராஜூ இப்படத்தை தயாரித்திருந்தார். ரூ.65 கோடியில் உருவான இப்படம் ரூ.20 கோடியை மட்டுமே வசூலித்து நஷ்டத்தை ஈட்டியது. மணிஷர்மா இசையமைத்துள்ள இப்படம் புகழ்பெற்ற இலக்கியப்படைப்பை தழுவி எடுக்கப்பட்டது. இந்நிலையில் படம் இன்று அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது.
சொப்பன சுந்தரி: சார்லஸ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 14-ம் தேதி வெளியான படம் ‘சொப்பன சுந்தரி’. ப்ளாக் காமெடி ட்ராமாவாக உருவான இப்படத்தில் லக்ஷ்மி ப்ரியா, தீபா சங்கர், கருணாகரன், ரெட்டின் கிங்ஸ்லீ, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விஷால் சந்திர சேகர், அஜ்மல் தாஹ்சீன் இசையமைத்திருந்த இப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.
திருவின்குரல்: ஹரீஸ் பிரபு இயக்கத்தில் அருள்நிதி, பாரதிராஜா நடிப்பில் ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது ‘திருவின் குரல்’. ஆத்மிகா, சுபத்ரா ராபர்ட் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்திருந்தார். லைகா தயாரித்திருந்த இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படம் தற்போது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் காணக்கிடைக்கிறது.
விக்ரம் வேதா (இந்தி): சயீஃப் அலிகான், ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் ‘விக்ரம் வேதா’. தமிழில் படத்தை இயக்கிய புஷ்கர் - காயத்ரி இந்தியிலும் படத்தை ரீமேக் செய்திருந்தனர். சாம் சி.எஸ், விஷால் சேகர் இசையமைத்திருந்த இப்படத்தை ஜியோ ஸ்டூடியோஸ் தயாரித்திருந்தது. தற்போது படம் ஜியோ சினிமா ஓடிடியில் வெளியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
3 days ago
ஓடிடி களம்
4 days ago
ஓடிடி களம்
5 days ago
ஓடிடி களம்
7 days ago
ஓடிடி களம்
10 days ago
ஓடிடி களம்
16 days ago
ஓடிடி களம்
18 days ago
ஓடிடி களம்
19 days ago
ஓடிடி களம்
22 days ago
ஓடிடி களம்
23 days ago
ஓடிடி களம்
25 days ago
ஓடிடி களம்
26 days ago
ஓடிடி களம்
26 days ago
ஓடிடி களம்
26 days ago
ஓடிடி களம்
26 days ago