பாரதிராஜா, தியாகராஜன் குமாரராஜா உட்பட 6 இயக்குநர்களின் ‘மாடர்ன் லவ் - சென்னை’ மே 18-ல் ரிலீஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘மாடர்ன் லவ்’ ஆந்தாலஜி வெப் தொடரின் இந்திய பதிப்பான ‘மாடர்ன் லவ் - சென்னை’ தொடர் மே 18-ல் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

2019-ஆம் ஆண்டு அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற வெப் தொடர் ‘மாடர்ன் லவ்’. ஆந்தாலஜி வகையைச் சேர்ந்த இத்தொடரின் இந்திய பதிப்பான ‘மாடர்ன் லவ் - மும்பை’ கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இத்தொடரின் சென்னை அத்தியாயத்தின் வெளியீட்டுத் தேதியை ப்ரைம் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி இத்தொடர் வரும் மே 18-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகிறது.

டைலர் டர்டன் அண்ட் கினோ ஃபிஸ்ட் நிறுவனம் தயாரித்துள்ள இத்தொடரில் பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜுமுருகன், கிருஷ்ணகுமார் ராம்குமார் , அக்‌ஷய் சுந்தர் மற்றும் தியாகராஜன் குமாரராஜா ஆகிய ஆறு இயக்குநர்களின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்தத் தொடருக்கு இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் குமார், மற்றும் ஷான் ரோல்டான் ஆகியோர் இசையமைத்துள்ளனர். பாடல்கள் இளையராஜா, யுகபாரதி மற்றும் பாக்கியம் சங்கரால் எழுதப்பட்டுள்ளன.

இத்தொடரில் ஆறு அத்தியாயங்கள் இடம் பெற்றுள்ளன. முதல் அத்தியாயம்: ‘லாலாகுண்டா பொம்மைகள்’ - இதனை ராஜு முருகன் இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இதில் ஸ்ரீ கௌரி ப்ரியா, வாசுதேவன் முரளி, மற்றும் வசுந்தரா ஆகியோர் நடித்துள்ளனர். இரண்டாம் அத்தியாயம்: ‘இமைகள்’ - பாலாஜி சக்திவேல் இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, அசோக் செல்வன், மற்றும் டி.ஜே.பானு ஆகியோர் நடித்துள்ளனர்.

மூன்றாவது அத்தியாயம்: ‘காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற இமோஜி’ - கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கியுள்ள இந்த அத்தியாயத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இதில் ரிது வர்மா, சம்யுக்தா விஸ்வநாதன், பவன் அலெக்ஸ் மற்றும் அனிருத் கனகராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். நான்காவது அத்தியாயம்: ‘மார்கழி’ - இதனை அக்‌ஷய் சுந்தர் இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். சஞ்சுளா சாரதி, சூ கோய் ஷெங் மற்றும் ஸ்ரீகிருஷ்ணா தயாள் ஆகியோர் நடித்துள்ளனர்

ஐந்தாவது அத்தியாயம்: ‘பறவை கூட்டில் வாழும் மான்கள்’ - பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜா இசையமைத்துள்ள இந்த அத்தியாயத்தில் கிஷோர், ரம்யா நம்பீசன் மற்றும் விஜயலக்ஷ்மி ஆகியோர் நடித்துள்ளனர். ஆறாவது அத்தியாயம்: ‘நினைவோ ஒரு பறவை’ - இதனை தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். இதில் வாமிகா மற்றும் பீபி ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

2 days ago

ஓடிடி களம்

6 days ago

ஓடிடி களம்

8 days ago

ஓடிடி களம்

9 days ago

ஓடிடி களம்

11 days ago

ஓடிடி களம்

13 days ago

ஓடிடி களம்

20 days ago

ஓடிடி களம்

22 days ago

ஓடிடி களம்

23 days ago

ஓடிடி களம்

26 days ago

ஓடிடி களம்

27 days ago

ஓடிடி களம்

29 days ago

ஓடிடி களம்

1 month ago

ஓடிடி களம்

1 month ago

ஓடிடி களம்

1 month ago

மேலும்