அமேசான் பிரைமில் வெளியானது கௌதம் கார்த்திக்கின் ‘ஆகஸ்ட் 16, 1947’!

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ள ‘ஆகஸ்ட் 16,1947’ திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. கடந்த ஏப்ரல் 7-ம் தேதி அன்று இந்தப் படம் திரையில் வெளியாகி இருந்தது.

பிரிட்டிஷ் ஆட்சியாளரின் பிடியில் இருந்து இந்திய தேசம் விடுதலை பெற்ற பிறகும் ‘செங்காடு’ எனும் கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு விடுதலை கிடைத்த செய்தியே அறியாத வகையில் சூழ்ச்சிக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு விடுதலை கிடைத்ததா என்பதே கதை. இயக்குநர் பொன்குமார் படத்தை சிறப்பாக இயக்கி இருந்தார்.

நாயகன் கௌதம் கார்த்திக், அவரது நண்பராக வரும் புகழ், பிரிட்டிஷ் அதிகாரியாக வரும் ரிச்சர்ட் ஆஷ்டன், அவரது மகனாக நடித்துள்ள ஜேசன் ஷா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் தங்கள் நடிப்பால் கவனம் ஈர்த்துள்ளனர். ஒளிப்பதிவு, கலை ரீதியாகவும் இந்தப் படம் கவனம் ஈர்க்கிறது. மேலும், படம் திரையரங்குகளில் வெளியானபோது விமர்சன ரீதியாகவும், மக்களிடமும் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE