விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் உருவான ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் வரும் ஜனவரி 1-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் செல்ல அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்த படம் ‘கட்டா குஸ்தி’. கடந்த டிசம்பர் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தை ரவிதேஜாவுடன் இணைந்து விஷ்ணு விஷால் தயாரித்திருந்தார். கருணாஸ், முனிஷ்காந்த், ஸ்ரீஜா ரவி, காளி வெங்கட், ரெடின் கிங்க்ஸ்லீ உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழகத்தில் வெளியிட்டது. ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
ரூ.7 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.40 கோடியைத் தாண்டி வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், படம் 2023 ஜனவரி 1-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
2 days ago
ஓடிடி களம்
3 days ago
ஓடிடி களம்
4 days ago
ஓடிடி களம்
6 days ago
ஓடிடி களம்
9 days ago
ஓடிடி களம்
15 days ago
ஓடிடி களம்
17 days ago
ஓடிடி களம்
18 days ago
ஓடிடி களம்
21 days ago
ஓடிடி களம்
22 days ago
ஓடிடி களம்
24 days ago
ஓடிடி களம்
25 days ago
ஓடிடி களம்
25 days ago
ஓடிடி களம்
25 days ago
ஓடிடி களம்
25 days ago