‘திருச்சிற்றம்பலம்’ முதல் ‘யானை’ வரை: தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

By செய்திப்பிரிவு

இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் என்னென்ன புதுப் படங்கள் வெளியாகின்றன என்பது குறித்து ஒரு விரைவு முன்னோட்டத்தைப் பார்ப்போம். திரைப்படங்கள் மட்டுமல்லாமல், எந்தெந்த வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன என்பதையும் அறிவோம்.

தியேட்டர் ரிலீஸ்: மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. நித்யாமேனன், ராஷிகண்ணா, ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ள இப்படம் திரையரங்குகளில் இன்று (ஆகஸ்ட் 18) வெளியாகியுள்ளது. டாப்சி நடிப்பில் அனுராக் காஷ்யப் இயக்கியுள்ள 'தோ பாரா' (do baara) ஹிந்தி திரைப்படத்தை நாளை (ஆகஸ்ட் 19) முதல் திரையரங்குகளில் காணலாம். அசோக்குமார்,சாந்தினி நடித்துள்ள 'மாயத்திரை' நாளை திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

நேரடி ஓடிடி ரிலீஸ்: விஜே கோபிநாத் இயக்கத்தில், வெற்றி, அஸ்வினி சந்திரசேகர் நடித்துள்ள 'ஜீவி-2' திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது. ஆனந்த் தேவரகொண்டா, அபிஷேக் பானர்ஜி நடித்துள்ள ஹைவே (Highway) தெலுங்கு படம் ஆஹாவில் நாளை ரிலீசாகிறது.

அன்னா-மரியா சீக்லுக்கா, மைக்கேல் மோரோன் நடித்துள்ள 'தி நெக்ஸ்ட் 356 டேஸ்' (The Next 365 Days) ஹாலிவுட் படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நாளை வெளியாக உள்ளது.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: அருணாச்சலம் முருகையன் இயக்கத்தில் யோகிபாபு, கருணாகரன் நடித்த திரைப்படம் 'பன்னிகுட்டி 'ஆகஸ்ட் 14-ம் தேதி சன்நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த 'யானை' படம் நாளை (ஆகஸ்ட் 19) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

உன்னி கோவிந்தராஜ் இயக்கத்தில் சுராஜ் வெஞ்சரமூடு, அப்ஹிஜா, ஜாஃபர் இடுக்கி நடித்துள்ள 'ஹெவன்' மலையாள படம் ஹாட்ஸ்டாரில் நாளை வெளியாக உள்ளது.

வெப் சீரிஸ்: இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் 'தமிழ் ராக்கர்ஸ்' இணையள தொடர் சோனி லிவ் ஓடிடியில் நாளை வெளியாகிறது. கோல்டி பெஹல், ஷ்ரத்தா சிங் இணைந்து இயக்கியுள்ள 'துரங்கா' (Duranga) ஜீ5 தளத்தில் நாளை காணக்கிடைக்கும். ஜான்சீனா, ஜெனிஃபர் ஹோலந்து நடித்துள்ள 'பீஸ்மேக்கர்' (peacemaker) தொடர் அமேசான் ப்ரைம் தளத்தில் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

7 hours ago

ஓடிடி களம்

4 days ago

ஓடிடி களம்

6 days ago

ஓடிடி களம்

7 days ago

ஓடிடி களம்

9 days ago

ஓடிடி களம்

11 days ago

ஓடிடி களம்

18 days ago

ஓடிடி களம்

20 days ago

ஓடிடி களம்

21 days ago

ஓடிடி களம்

24 days ago

ஓடிடி களம்

25 days ago

ஓடிடி களம்

27 days ago

ஓடிடி களம்

28 days ago

ஓடிடி களம்

28 days ago

ஓடிடி களம்

28 days ago

மேலும்