'ஜெர்ஸி' முதல் 'ஓ மை டாக்' வரை: இந்த வார தியேட்டர், ஓடிடி ரிலீஸ் - ஒரு பார்வை

By செய்திப்பிரிவு

இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் என்னென்ன புதுப்படங்கள் வெளியாகின்றன என்பது குறித்து ஒரு விரைவு முன்னோட்டத்தைப் பார்ப்போம். திரைப்படங்கள் மட்டுமல்லாமல், எந்தெந்த வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன என்பதையும் அறிவோம்.

தியேட்டர்: ஷாயித் கபூர் - மிர்னாள் தாக்கூர் நடிப்பில் 'ஜெர்ஸி' திரைப்படம் இன்று முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. இது நானி நடிப்பில் தெலுங்கில் வெளியான 'ஜெர்ஸி' இந்தி ரீமேக் என்பது குறிபிப்டத்தக்கது.

ஆக்‌ஷன், அன்வெஞ்சர் கலந்து காமெடி படமான சோனிக் ஹெட்ஜ்ஹாக் 2 (Sonic the Hedgehog 2) இன்று முதல் திரையரங்குகளில் காணலாம்.

'தி அன்பியரபுள் வெயிட் ஆஃப் மாஸிவ் டாலண்ட்' (the unbearable weight of massive talent) திரைப்படமும் இன்று வெளியாகிறது.

ஓடிடி: ஓடிடியை எடுத்துகொண்டால், நேற்று அமேசான் ப்ரைம் தளத்தில், அருண்விஜய், அவரது மகன் அர்னவ் விஜய் நடித்த 'ஓ மை டாக்' திரைப்படம் வெளியானது. குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கக் கூடிய படமாக இருக்கும்.

மலையாள படமான அந்தாக்‌ஷரி (Antakshari) சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இது தவிர, திரையரங்குகளில் வெளியாகி, ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கும் படங்களின் பட்டியலையும் பார்க்கலாம்.

'ரெசிடென்ட் ஈவில் வெல்கம் டூ ரெக்கான் சிட்டி' (resident evil welcome to raccoon city) திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

அதேபோல திரையரங்குகளில் வித்தியாசமான முயற்சியில் வெளியான 'குதிரை வால்' திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் காணக்கிடைக்கிறது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்த, 'மன்மத லீலை' திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

தெலுங்கில் வெளியான கஹானி திரைப்படத்தை ஆஹா ஓடிடியில் காணமுடியும்.

வெப்சீரிஸ்:

பெட்டர் கால் சால் 6-வது சீசன் (better call saul) நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கிறது.

ஆனந்தம் இணைய தொடர் ஜீ5 தளத்தில் வெளியாகியிருக்கிறது.

கிளிட்டி மைண்ட் (guily mind) இந்தி இணைய தொடரை அமேசான் பிரைமில் இன்று முதல் காணலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

20 hours ago

ஓடிடி களம்

5 days ago

ஓடிடி களம்

6 days ago

ஓடிடி களம்

8 days ago

ஓடிடி களம்

9 days ago

ஓடிடி களம்

12 days ago

ஓடிடி களம்

19 days ago

ஓடிடி களம்

21 days ago

ஓடிடி களம்

22 days ago

ஓடிடி களம்

25 days ago

ஓடிடி களம்

25 days ago

ஓடிடி களம்

28 days ago

ஓடிடி களம்

28 days ago

ஓடிடி களம்

29 days ago

ஓடிடி களம்

29 days ago

மேலும்