‘வதந்தி’ சீசன் 2-வில் நாயகனாக சசிகுமார் ஒப்பந்தம்

By ஸ்டார்க்கர்

‘வதந்தி’ சீசன் 2 வெப் தொடரில் நாயகனாக நடிக்க சசிகுமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்

2022-ம் ஆண்டு அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற தொடர்தான் எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘வதந்தி’. தற்போது இதன் இரண்டாவது சீசனை தொடங்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் நாயகனாக சசிகுமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவருடன் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

‘வதந்தி’ முதல் சீசன் தொழில்நுட்பக் குழுவினரே இதிலும் பணிபுரிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். முதல் சீசனை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் 2-ம் சீசனையும் இயக்கவுள்ளார். தற்போது சசிகுமாருடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மே மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளார்கள்.

‘சுழல்’ வெப் தொடருக்கு பின்பு, புஷ்கர் – காயத்ரி மற்றும் அமேசான் ப்ரைம் வீடியோ இணைந்து தயாரித்த தொடர் ‘வதந்தி’. ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, லைலா, நாசர், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த வெப் தொடரின் மூலமாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி முன்னணி நாயகியாக வலம் வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

1 day ago

ஓடிடி களம்

2 days ago

ஓடிடி களம்

8 days ago

ஓடிடி களம்

8 days ago

ஓடிடி களம்

9 days ago

ஓடிடி களம்

13 days ago

ஓடிடி களம்

15 days ago

ஓடிடி களம்

15 days ago

ஓடிடி களம்

15 days ago

ஓடிடி களம்

16 days ago

ஓடிடி களம்

18 days ago

ஓடிடி களம்

18 days ago

ஓடிடி களம்

21 days ago

ஓடிடி களம்

21 days ago

ஓடிடி களம்

22 days ago

மேலும்